search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னலுடன்"

    காடையாம்பட்டி, ஏற்காட்டில் இடி, மின்னலுடன் கொட்டிய கன மழையால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது.

    குறிப்பாக காடையாம்பட்டி, ஏற்காடு, வீரகனூர், மேட்டூர், ஓமலூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கோடை காலத்தில் பெய்த மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் ேதங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    ஏற்காட்டில் 7 மணிக்கு தொடங்கிய மழை 9 மணி வரை கனமழையாக பெய்தது. பின்னர் மீண்டும் 10 மணிக்கு தொடங்கிய மழை விடிய, விடிய சாரல் மழையாக நீடித்தது. இதனால் இரவில் குளிர்ந்த சீேதாஷ்ண நிலவியது. இன்று காலை வெயில் அடித்த படி இருந்தது. மழையை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது . இதனால் பொது மக்கள் தவித்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்ச–மாக காடையாம்–பட்டியில் 63 மி.மீ. மழை பெய்துள்ளது. ஏற்காடு 49 , வீரகனூர் 42, மேட்டூர் 26.8, ஓமலூர் 26, தம்மமம்பட்டி 25, கரியகோவில் 17, எடப்பாடி 17.2, சேலம் 12.3, சங்ககிரி 9.2, ஆத்தூர் 4.3, கெங்கவல்லி 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 291.8 மி.மீ. மழை பெய்துள்ளது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் கன மழை பெய்யும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நாளை 15-ந் தேதி இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

    மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நாளை சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    ×