என் மலர்

  நீங்கள் தேடியது "Sreehar Prasad"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மாடல் அழகி டயானா எரப்பா நடித்திருப்பதாக சிம்பு கூறியிருக்கிறார். #CCV #STR
  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `செக்கச் சிவந்த வானம்'. அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு செர்பியாவில் சமீபத்தில் முடிந்தது. 

  இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மாடல் அழகி டயானா எரப்பா நடித்திருப்பதாக சிம்பு வெளியிட்ட வீடியோவில் கூறியிருக்கிறார். சிம்பு - டயானா எரப்பா சம்பந்தப்பட்ட காட்சிகள் கடைசியாக செர்பியாவில் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் படத்தின் டப்பிங் பணிகள் துவங்க இருக்கிறது.   சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். 

  தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. படத்தை வருகிற செப்டம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. #CCV #STR #Simbu #DayanaErappa

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில், நடிகர் சிம்பு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #CCV
  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `செக்கச் சிவந்த வானம்'. அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் என பலரும் இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு செர்பியாவில் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

  சமீபத்தில் துபாயில் படப்பிடிப்பை முடித்த மணிரத்னம், அடுத்ததாக செர்பியாவில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தார். இந்த நிலையில், சிம்பு காட்சிகளுடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது.   சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். 

  தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்க இருப்பதாகவும் படத்தை வருகிற செப்டம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. #CCV #VijaySethupathi

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #CCV
  மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்படிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அவரது காட்சிகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

  மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் இணைந்து நடிக்கின்றனர். 

  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அரவிந்த்சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் அருண் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு முடித்துவிட்ட நிலையில், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. சிம்புவும் சமீபத்தில் துபாய் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். இந்த நிலையில், விஜய் சேதுபதியும் அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டாராம்.  ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

  சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. 

  படத்தை வருகிற அக்டோபரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #CCV #VijaySethupathi

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சிம்பு - விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் படப்பிடிப்பு நிறைவடையவிருக்கிறது. #CCV
  மணிரத்னம் தற்போது முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்கச் சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் அரவிந்த்சாமி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்தார்.  அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அருண் விஜய் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துவிட்டனர். தற்போது மணிரத்னம், சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை துபாயில் படமாக்கி வருகிறார்.   அதேநேரத்தில் ஜோதிகாவின் காட்சிகளும் விரைவில் முடியவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் சிம்பு, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும், இந்த மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படம் வருகிற அக்டோபரில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. #CCV #STR #VijaySethupathi

  ×