என் மலர்

  சினிமா

  சிம்பு - விஜய் சேதுபதி இணையும் காட்சிகளை படமாக்கும் மணிரத்னம்
  X

  சிம்பு - விஜய் சேதுபதி இணையும் காட்சிகளை படமாக்கும் மணிரத்னம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சிம்பு - விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் படப்பிடிப்பு நிறைவடையவிருக்கிறது. #CCV
  மணிரத்னம் தற்போது முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்கச் சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் அரவிந்த்சாமி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்தார்.  அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அருண் விஜய் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துவிட்டனர். தற்போது மணிரத்னம், சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை துபாயில் படமாக்கி வருகிறார்.   அதேநேரத்தில் ஜோதிகாவின் காட்சிகளும் விரைவில் முடியவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் சிம்பு, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும், இந்த மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படம் வருகிற அக்டோபரில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. #CCV #STR #VijaySethupathi

  Next Story
  ×