என் மலர்
சினிமா

செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பை முடித்த சிம்பு
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில், நடிகர் சிம்பு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #CCV
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `செக்கச் சிவந்த வானம்'. அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் என பலரும் இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு செர்பியாவில் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் துபாயில் படப்பிடிப்பை முடித்த மணிரத்னம், அடுத்ததாக செர்பியாவில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தார். இந்த நிலையில், சிம்பு காட்சிகளுடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. விரைவில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்க இருப்பதாகவும் படத்தை வருகிற செப்டம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. #CCV #VijaySethupathi
Next Story