என் மலர்

  நீங்கள் தேடியது "South Railway"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை- மதுரை இடையே 7 மணி நேரத்தில் பயணம் செய்யும் தேஜஸ் ரெயில் அடுத்த வாரம் முதல் இயக்கப்படுகிறது. #TejasTrain #Madurai #Chennai
  சென்னை:

  சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற் சாலையில் அதிவேகம் மற்றும் நவீன வசதிகள் கொண்ட தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.

  தேஜஸ் ரெயிலில் ஜி.பி.எஸ். கருவி, வை-பை வசதி, சி.சி. டி.வி., கண்காணிப்பு கேமரா, தானியங்கி கதவுகள், கம்ப்யூட்டர்களுக்கு தேவையான சார்ஜிங் போன்ற வசதிகள் உள்ளது.

  ரெயில் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது. 23 சேர்கார்களுடன் உயர் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளது. கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பெட்டிகளின் உள்புறம் பைபர் பிளாஸ்டிக் வடிவமைப்புடன் எழிலான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது.

  இருக்கைகள் அனைத்தும் ஆடம்பரமாக சொகுசான முறையிலும் கழிவறைகள் நவீன வசதியுடனும் இருக்கிறது.

  ஜன்னல் கதவுகள் மோட்டார் உதவியுடன் எளிதில் இயக்கக்கூடிய வகையிலும், வெளிப்புற கதவுகள் தானியங்கி முறையில் இயங்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

  வழக்கமான ரெயில் பெட்டிகளில் 78 இருக்கைகள் இடம் பெற்று இருக்கும். இந்த தேஜஸ் ரெயிலில் 56 இருக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளதால் விசாலமான முறையில் நெருக்கடி இல்லாமல் அமர்ந்து பயணம் செய்யலாம்.  முதலாவதாக தேஜஸ் ரெயில் மேற்கு ரெயில்வேக்கு வழங்கப்பட்டது. அந்த ரெயில் மும்பை- கோவா இடையே கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.

  2-வது தேஜஸ் ரெயில் தயாரிக்கப்பட்டு தெற்கு ரெயில்வேக்கு வழங்கப்பட்டது. இது சென்னை-மதுரை இடையே பகல் நேர ரெயிலாக இயக்கப்படுகிறது.

  எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் ரெயில் மதுரைக்கு பிற்பகல் 1 மணிக்கு சென்றடையும். பின்னர் மதுரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.35 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்தடையும்.

  சென்னை- மதுரை இடையே தேஜஸ் ரெயில் அடுத்த வாரம் முதல் இயக்கப்படுகிறது. வாரத்தில் வியாழக்கிழமையை தவிர மற்ற 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது.

  சராசரியாக 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் தேஜஸ் ரெயில் சென்னை- மதுரை இடையேயான 497 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரத்தில் சென்றடையும்.

  தற்போது வைகை எக்ஸ்பிரஸ் 8 மணி நேரத்திலும், பாண்டியன் எக்ஸ்பிரஸ் 9 மணி நேரத்திலும் மதுரை செல்கின்றன.

  தேஜஸ் ரெயிலில் சேர் கார் கட்டணம் ரூ.1,140-ல் இருந்து ரூ.1,200 வரைக்குள் நிர்ணயிக்கப்படுகிறது. சிறப்பு வகுப்பு ரெயில் பெட்டி கட்டணம் ரூ.2,135-ல் இருந்து ரூ.2,200 வரை இருக்கும். தேஜஸ் ரெயில் கட்டணம் சதாப்தி ரெயில் கட்டணத்தை விட 20 சதவீதம் அதிகமாக இருக்கும்.

  விழுப்புரம், திருச்சி ஆகிய 2 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். #TejasTrain #Madurai #Chennai
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் நாளை முதல் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  சென்னை:

  தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

  பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  * கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை காலை 4.40, 5.30 மணிக்கு புறப்படும் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

  * சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் காலை 5.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வைகை, பல்லவன், திருச்செந்தூர், பாண்டியன் உள்ளிட்ட எக்ஸ் பிரஸ் ரெயில் சேவையில் நாளை ஒரு நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  சென்னை:

  சென்னை வண்டலூர்-கூடுவாஞ்சேரி இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

  திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ், காரைக்குடி- சென்னை பல்லவன் எக்ஸ் பிரஸ், மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ஆகியவை 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாகவும், திருச்சி- சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாகவும், லோக்மான்யா திலக்- காரைக்கால் எக்ஸ்பிரஸ் 30 நிமிடங்கள் தாமதாகவும் எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்துசேரும்.

  சென்னை-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் எழும்பூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கு பதிலாக, 20 நிமிடங்கள் தாமதமாகவும், சென்னை- காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள் தாமதமாகவும், சென்னை-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாகவும், செங்கல்பட்டு-காக்கிநாடா துறைமுகம் சர்கார் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதமாகவும் புறப்பட்டு செல்லும்.

  இந்த தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு பணி குறித்த ஒத்திகை நடைபெறுவதால் முன்பதிவு மையம் 2½ மணி நேரம் இயங்காது என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
  சென்னை:

  தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

  சென்னையில் பயணிகள் முன்பதிவு அமைப்புக்கு நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு பணி குறித்த ஒத்திகை நடைபெறுகிறது. எனவே நாளை மதியம் 2.15 மணி முதல் 3.15 மணி வரை 1 மணி நேரமும் மற்றும் நாளை இரவு 11.45 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை 1.20 மணி வரை 1 மணி நேரம் 35 நிமிடங்களும் பயணிகள் முன்பதிவு அமைப்பு செயல்படாது.  மேலும் தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் உள்ள பயணிகள் முன்பதிவு மைய கவுண்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்யும் வசதியும், 139 சேவையும், ரெயில்வே இணையதளமும் இந்த நேரங்களில் செயல்படாது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை-திருவள்ளூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  சென்னை:

  தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  சென்னை-திருவள்ளூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று(புதன்கிழமை) முதல் 26-ந் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  * ஆவடியில் இருந்து அதிகாலை 2.50 மணிக்கு பட்டாபிராம் ராணுவ சைடிங் நோக்கி புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

  * பட்டாபிராம் ராணுவ சைடிங்கில் இருந்து அதிகாலை 3.20 மணிக்கு மூர்மார்க்கெட் நோக்கி புறப்படும் மின்சார ரெயில் பட்டாபிராம் ராணுவ சைடிங்-ஆவடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
  ×