என் மலர்
நீங்கள் தேடியது "Snake dance"
- பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- மின் அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி திருக்கனூர் அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் செடல் உற்சவம் அய்யப்பனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்க லடன் தொடங்கியது. முத்து மாரியம்மன் கரகம் வீதியுலா, சாகை வார்த்தல் நடந்தது. நேற்று இரவு 8 மணிக்கு கோவில் வளாகத்தில் சிவன், பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி, வித்தியாசமான முறையில் பழ வகைகளுக்கு பதிலாக விவசாயிகள் மூலம் நேரடியாக கிடைக்கக்கூடிய தேங்காய், மாங்காய், எலுமிச்சை, கொய்யா, நெல்கதிர், நுங்கு, வாழைக்காய், நார்த்தங்காய், பப்பாளி, ஈச்சங்காய் உள்ளிட்டவை சீர்வரிசை தட்டில் வைக்கப்பட்டிருந்தன.
வம்புப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நிகழச்சியில் பாம்பு போல நடனமாடி திருக்கல்யாண மாலையை இரு பூசாரிகள் எடுத்து சென்று சாமிகளுக்கு அணிவித்தனர். இதனை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். தொடர்ந்து, மின் அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்தது.
- நாட்டறம்பள்ளி அருகே 2 பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு தீயணைப்புத் துறையினர் மீட்டு அருகில் உள்ள காட்டில் விட்டனர்.
- அப்பகுதி இளைஞர்கள் 2 பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்ததை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே 2 பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு தீயணைப்புத் துறையினர் மீட்டு அருகில் உள்ள காட்டில் விட்டனர்.
நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தரபள்ளி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 27) இவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று மாலை 2 பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்தன. இதனை கண்ட பூபதி உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது 2 பாம்புகள் பின்னி விளையாடி கொண்டிருந்ததை கண்டு சுமார் அரை மணி நேரம் காத்திருந்தனர். அதன் பிறகு பாம்புகள் தனித்தனியாக பிரிந்து சென்றது. பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர்.
மேலும் அப்பகுதி இளைஞர்கள் 2 பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்ததை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி சிக்கபல்லபுரா மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நாகராஜ் வாக்கு சேகரித்தார். அப்போது 1954-ல் மெகா ஹிட் ஆன 'நாகின்' படத்தில் உள்ள பாடலுக்கு அதிரடி நடனம் ஆடினார். பாம்பு நடனம் ஆடிக்கொண்டே காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அவரது நடனம் தற்போது சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து 10 நிமிடங்கள் சலைக்காமல் ஆடினார். பின்னர் வயதாகி விட்டது, ஆட்டத்தை குறையுங்கள் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் நாகராஜை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அரசு சாரா நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பில், நாகராஜ் நாட்டிலேயே பணக்கார எம்எல்ஏவாக கருதப்படுகிறார். அவருக்கு ரூ. 1,000 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. #CongressMP #NaginDance






