search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவில் பாம்பு நடனமாடி வாக்கு சேகரித்த மந்திரி நாகராஜ்
    X

    கர்நாடகாவில் பாம்பு நடனமாடி வாக்கு சேகரித்த மந்திரி நாகராஜ்

    கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின்போது பாம்பைப்போல் நடனமாடி காங்கிரஸ் கட்சியை சார்ந்த வீட்டு வசதித்துறை மந்திரி நாகராஜ் வாக்கு சேகரித்தார். #CongressMP #NaginDance
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல்  ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கென அனைத்து அரசியல் கட்சியினரும், முக்கிய தலைவர்களும் தேர்தல் பிரசாரம், பத்திரிக்கையாளர் சந்திப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பெங்களூருவில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹோஸ்கோடே பகுதியில் வித்தியாசமான முறையில் வாக்களர்களை கவர மந்திரி புதிய முறையை கையாண்டார். கர்நாடகாவில் வீட்டு வசதித்துறை மந்திரி எம்.டி.பி. நாகராஜ்(67). வழக்கமாக வாக்கு சேகரிக்க செல்லும்போது நாகராஜ் பேண்டு வாத்தியங்களுடன் செல்வது வழக்கம். 



    காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி சிக்கபல்லபுரா மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நாகராஜ் வாக்கு சேகரித்தார். அப்போது  1954-ல் மெகா ஹிட் ஆன 'நாகின்' படத்தில் உள்ள பாடலுக்கு அதிரடி நடனம் ஆடினார். பாம்பு நடனம் ஆடிக்கொண்டே  காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அவரது நடனம் தற்போது சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    தொடர்ந்து 10 நிமிடங்கள் சலைக்காமல் ஆடினார். பின்னர் வயதாகி விட்டது, ஆட்டத்தை குறையுங்கள் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் நாகராஜை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் அரசு சாரா நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பில், நாகராஜ் நாட்டிலேயே பணக்கார எம்எல்ஏவாக கருதப்படுகிறார். அவருக்கு ரூ. 1,000 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. #CongressMP #NaginDance 

    Next Story
    ×