என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வந்தவாசி"

    • ஸ்ரீராம் என்ற சிறுவன் பலத்த காயமடைந்தான்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வழுர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன்கள் அபினேஷ் (வயது 16), முகேஷ் (14). வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அபினேஷ் 11-ம் வகுப்பும், முகேஷ் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர். இளங்காடு பகுதியில் உள்ள தனது தாத்தா முனியன் வீட்டிற்கு பள்ளி மாணவர்கள் இன்று காலை வந்தனர்.

    முனியன் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டை சீரமைப்பதற்கு இன்று காலை பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது திடீரென வீடு இடிந்து விழுந்தது. வீட்டினுள் விளையாடி கொண்டிருந்த அபினேஷ் மற்றும் முகேஷ் மீது வீட்டின் சுவர் விழுந்தன. இதில் இருவரும் இடிப்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.

    ஸ்ரீராம் (10) என்ற சிறுவன் பலத்த காயமடைந்தான். சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவந்து, படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பொன்னூர் போலீசார் விரைந்து சென்று அபினேஷ், முகேஷ் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • 9-வது வகுப்புடன் நித்யா பள்ளிப் படிப்பை கைவிட்டுள்ளார்
    • நித்யா, காலை சிற்றுண்டி சமையலராக தற்காலிக பணியில் இருந்துகொண்டே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கோவிலூர் கிராமத்தில் தாயும் மகனும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

    9-வது வகுப்புடன் நித்யா பள்ளிப் படிப்பை கைவிட்டுள்ளார். தற்போது கல்வி கற்கும் ஆசை வரவே, கோவிலூர் அரசுப் பள்ளியில் படிக்கும் அவரது மகன் சந்தோஷ் உடன் இணைந்து தனியார் பயிற்சி மையத்தில் படித்து தனித்தேர்வராக 10ம் வகுப்பு தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

    நித்யா, கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி சமையலராக தற்காலிக பணியில் இருந்துகொண்டே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

    அமலா பால் நடிப்பில் வெளியான அம்மா கணக்கு என்ற திரைப்படத்தில் அம்மாவும் மகளும் சேர்ந்து 10 வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். அந்த திரைப்படத்தில் நடந்தது போலவே தற்போது திருவண்ணாமலையில் தாயும் மகனும் 10 வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

    ×