என் மலர்
நீங்கள் தேடியது "ரந்தீர் ஜெய்ஸ்வால்"
- சட்டவிரோத நிலப் பயன்பாடு என்று சித்தரித்து, இடிப்பை அனுமதித்ததாக ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டினார்.
- 2026ல் காலாவதியாகும் 1996 கங்கை நதி நீர் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து வங்கதேசத்துடன் பேச இந்தியா தயாராக உள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் துர்கா கோயில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வங்கதேச இடைக்கால அரசு, அந்நாட்டின் இந்து சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் மத நிறுவனங்களைப் பாதுகாக்கத் தவறியதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இடிக்கப்பட்ட கோயிலுக்கு பாதுகாப்பு அளிப்பதற்குப் பதிலாக, இடைக்கால அரசு அதை சட்டவிரோத நிலப் பயன்பாடு என்று சித்தரித்து, இடிப்பை அனுமதித்ததாக ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டினார்.
வங்கதேசத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்வது வருத்தமளிக்கிறது என்றும் இந்துக்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களைப் பாதுகாப்பது வங்கதேச இடைக்கால அரசின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், 2026ல் காலாவதியாகும் 1996 கங்கை நதி நீர் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து வங்கதேசத்துடன் பேச இந்தியா தயாராக உள்ளது.
வங்கதேசத்தின் நில துறைமுகங்கள் வழியாக சில ஏற்றுமதிகளுக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகள், நியாயம், சமமான அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையிலானவை என்று ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
ஆயத்த ஆடைகள் மற்றும் சில நுகர்வோர் பொருட்கள் உட்பட வங்கதேசத்தின் சில ஏற்றுமதிகளுக்கு இந்தியா கடந்த மாதம் கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.
- இந்தியர்கள் கை, கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.
- இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு உள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவரை டிரம்ப் நிர்வாகம் நாடுகடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியர்கள் கை, கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு ராணுவ விமானத்தில் நாடுகடத்தப்பட்டது மத்திய அரசின் மீது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், புலம்பெயர்ந்தோர் விவகாரங்களில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு உள்ளது.
சட்டவிரோத வகையில் வசிக்கும் அல்லது பயணிக்கும் இந்திய குடிமக்களை நாடு கடத்தும் விஷயத்தில், அவர்களை பற்றிய விவரங்களை பெற்றதும், நாங்கள் அவர்களை அமெரிக்காவிலிருந்து திரும்ப அழைத்து கொள்கிறோம்.
ஜனவரி 2025-ல் இருந்து, 1,080 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 62 சதவீதம் பேர் வர்த்தக விமானங்களில் இந்தியாவுக்குத் திரும்பி உள்ளனர்" என்று தெரிவித்தார்.
- மறுக்க முடியாத யதார்த்தத்தை இதுபோன்ற பெயரிடுதல் மாற்ற முடியாது
- அருணாச்சலப் பிரதேசம் நேற்று, இன்று, நாளை என எப்போதும் இந்தியாவின் ஒரு மாநிலமாகும்.
அருணாச்சலப் பிரதேசத்தின் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்ற சீனா முயற்சிப்பதை இந்தியா கண்டித்துள்ளது.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள இடங்களுக்குப் பெயரிட சீனா பயனற்ற மற்றும் அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்தியா அத்தகைய முயற்சிகளை முற்றிலுமாக நிராகரிக்கிறது" என்று ஜெய்ஸ்வால் கூறினார்.
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்ற மறுக்க முடியாத யதார்த்தத்தை இதுபோன்ற பெயரிடுதல் மாற்ற முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.
இதுதொடர்பாக பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "அருணாச்சலப் பிரதேசம் நேற்று, இன்று, நாளை என எப்போதும் இந்தியாவின் ஒரு மாநிலமாகும். பெயரை மாற்றுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது" என்று கூறினார்.
- போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியர்களை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதில் உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
போரில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள இந்தியர்களை அதில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என ரஷிய அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொய் வாக்குறுதிகள் அளிக்கும் ஏஜெண்ட்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், ஆள் கடத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஏஜெண்ட் அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் யாரும் நம்பவேண்டாம். அந்த வாக்குறுதிகள் சிக்கலை ஏற்படுத்துவதுடன் ஆபத்தை ஏற்படுத்தும்.
ரஷிய ராணுவத்திற்கு உதவியாகப் பணிபுரியும் இந்தியர்களை உடனே அந்தப் பணியில் இருந்து விடுவிப்பதுடன் அவர்களை தாயகம் அழைத்து வர உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.






