என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரோக்கியம் சீராகும்"

    • வெதுவெதுப்பான இந்த நீர் சருமத்தில் இருக்கும் துளைகளை திறக்க வழிவகை செய்யும்.
    • குளிர் குளியல் தசை இழப்பு, வீக்கத்தை குறைக்கும்.

    மழை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சி நிலைக்கு மாறிவிடும். அந்த குளிர் நீரில் குளியல் போடுவதற்கு பலரும் விரும்புவார்கள். ஆனால் குளிர்ந்த நீரை விட சுடு நீரில் குளியல் போடுவதுதான் மழைக்காலத்திற்கு சிறந்தது என்று ஒரு சிலர் கருதுவார்கள். இந்த இரண்டு குளியல் முறையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    சுடு நீர் குளியல்:

    தண்ணீரை சூடுபடுத்தி மேற்கொள்ளும் இந்த குளியல் மூலம் வெளிப்படும் வெப்பம் காரணமாக ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

    தசை வலி, மூட்டு வலியை குறைக்க உதவும்.

    வெதுவெதுப்பான இந்த நீர் சருமத்தில் இருக்கும் துளைகளை திறக்க வழிவகை செய்யும். அதில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் தன்மை மற்றும் நச்சுக்களை நீக்குவதை எளிதாக்கும்.

    தூங்க செல்வதற்கு முன்பு சுடுநீரில் குளிப்பது உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும். பின்னர் உடல் குளிர்ச்சி நிலைக்கு மாற்றமடையும்போது தூக்கத்தை வரவழைக்கும். நன்றாக தூங்குவதற்கு வழிவகை செய்யும்.

    குளிர் நீர் குளியல்:

    குளிர்ந்த நீர் நரம்பு மண்டலத்தை தூண்டி சுவாசத்தின் வழியே ஆக்சிஜனை உள்ளிழுப்பதை அதிகரிக்க செய்யும். உடலுக்குள் ஆக்சிஜன் செயல்பாட்டை மேம்படுத்தும். காலையில் சீக்கிரம் எழுவதற்கு வழிவகுக்கும்.

    இந்த குளிர் குளியல் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தலாம். ரத்த நாளங்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

    குளிர் குளியல் தசை இழப்பு, வீக்கத்தை குறைக்கும். உடற்பயிற்சி செய்த பிறகு குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்த பலனை அளிக்கும்.

    • உடற்பயிற்சி செய்வதால் மனமும் வலிமை பெறுகிறது.
    • உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி உதவுகிறது.

    நமது அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், நம்மால் எந்த வேலைகளையும் செய்ய முடியும்.

    உடற்பயிற்சி செய்வதால், நமது உடல் மட்டுமல்லாமல், மனமும் வலிமை பெறுகிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.

    கண்களுக்கான உடற்பயிற்சி

    இரு உள்ளங்கைகளையும், இரு கண்கள் மீது வைத்து மூடி அழுத்திக் கொள்ள வேண்டும். பின் ஐந்து வினாடிகள் கழித்து கைகளை எடுத்து விட வேண்டும். இதுபோல் ஐந்து முதல் ஆறு முறை தொடர்ந்து செய்ய வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் நனைத்த டவலைக் கொண்டு கண்களை மெதுவாக ஒற்றி எடுக்க வேண்டும். இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    காலுக்கான உடற்பயிற்சி

    இப்பொது அதிகம் பேர் பிளாட் வீடுகளில் தான் குடியிருக்கின்றனர். மாடிப்படிகளில் தொடர்ந்து ஏறி இறங்குவதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, மாடிப்படிகளில் வேகமாக ஏறி இறங்கும் போது, முழங்கால்களுக்குள் காணப்படும் பிரச்சனைகளை நீக்கி, மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது. எனவே முடிந்த வரை படிகளின் வழியே ஏறி இறங்குங்கள். லிப்ட் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுவது நல்லது. வயதான பெண்களுக்கு இது பொருந்தாது.

    கழுத்திற்கான உடற்பயிற்சி

    பெண்களின் கழுத்து பகுதி அழகுடன் திகழவும், கழுத்து எலும்புகளில் வலி ஏற்படாமல் இருக்கவும், இந்த பயிற்சி உதவுகிறது. நேராக நிமிர்ந்து தலையை மெதுவாக சுழற்ற வேண்டும். இதேபோல் வலது, இடது என மாறி மாறி கழுத்தை மெதுவாக சுழற்றும் போது கழுத்து தசைகள் வலுப்பெற்று நல்ல வனப்புடன் அழகாக இருக்கும்.

     சோம்பேறித்தனம்

    இன்று நாம் கடைக்கு சென்று கூட பொருள் வாங்க வேண்டாம். ஏனென்றால் அனைத்து பொருட்களுக்கும் டோர் டெலிவரி ஆகிவிடுகிறது. நமது உடலுக்கு வேலையை கிடையாது. இது நமது வாழ்வில் மிகப்பெரிய சோம்பேறித்தனத்தை உண்டாக்குகிறது. சோம்பேறித்தனத்தை சரி செய்ய தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். உடற்பயிற்சி செய்வதன் மூலம், சோம்பேறித்தனம் மற்றும் சோர்வு ஆகியவற்றை முறித்து புத்துணர்வு பெற முடியும்.

    தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும். அதனால் ஒரு நாளைக்கு தினசரி சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் பணி புரிந்து வருகின்றனர். வீட்டில் உள்ள பணிகள் மற்றும் அலுவலக பணிகள் என அனைத்திலும் உள்ள பெண்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்க்கு நேரம் கிடைப்பது இல்லை. ஆனால் அனைத்து பணிகளையும் செய்வதற்கு, நமது உடல் ஆரோக்கியம் அவசியமான ஒன்று. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி மிகவும் அவசியமான ஒன்று.

    நாம் செய்யும் வேலைகளை எவ்வளவு அவசியமானதாக கருதுகிறோமோ, அதுபோல பெண்கள் உடற்பயிற்சி செய்வதும் அவசியமான ஒன்று. உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் வலி, அசதி, மற்றும் உடலில் தேங்கி உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைக்க உதவுகிறது.

    ×