search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    உடற்பயிற்சி செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்
    X

    உடற்பயிற்சி செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்

    • உடற்பயிற்சி செய்வதால் மனமும் வலிமை பெறுகிறது.
    • உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி உதவுகிறது.

    நமது அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், நம்மால் எந்த வேலைகளையும் செய்ய முடியும்.

    உடற்பயிற்சி செய்வதால், நமது உடல் மட்டுமல்லாமல், மனமும் வலிமை பெறுகிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.

    கண்களுக்கான உடற்பயிற்சி

    இரு உள்ளங்கைகளையும், இரு கண்கள் மீது வைத்து மூடி அழுத்திக் கொள்ள வேண்டும். பின் ஐந்து வினாடிகள் கழித்து கைகளை எடுத்து விட வேண்டும். இதுபோல் ஐந்து முதல் ஆறு முறை தொடர்ந்து செய்ய வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் நனைத்த டவலைக் கொண்டு கண்களை மெதுவாக ஒற்றி எடுக்க வேண்டும். இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    காலுக்கான உடற்பயிற்சி

    இப்பொது அதிகம் பேர் பிளாட் வீடுகளில் தான் குடியிருக்கின்றனர். மாடிப்படிகளில் தொடர்ந்து ஏறி இறங்குவதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, மாடிப்படிகளில் வேகமாக ஏறி இறங்கும் போது, முழங்கால்களுக்குள் காணப்படும் பிரச்சனைகளை நீக்கி, மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது. எனவே முடிந்த வரை படிகளின் வழியே ஏறி இறங்குங்கள். லிப்ட் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுவது நல்லது. வயதான பெண்களுக்கு இது பொருந்தாது.

    கழுத்திற்கான உடற்பயிற்சி

    பெண்களின் கழுத்து பகுதி அழகுடன் திகழவும், கழுத்து எலும்புகளில் வலி ஏற்படாமல் இருக்கவும், இந்த பயிற்சி உதவுகிறது. நேராக நிமிர்ந்து தலையை மெதுவாக சுழற்ற வேண்டும். இதேபோல் வலது, இடது என மாறி மாறி கழுத்தை மெதுவாக சுழற்றும் போது கழுத்து தசைகள் வலுப்பெற்று நல்ல வனப்புடன் அழகாக இருக்கும்.

    சோம்பேறித்தனம்

    இன்று நாம் கடைக்கு சென்று கூட பொருள் வாங்க வேண்டாம். ஏனென்றால் அனைத்து பொருட்களுக்கும் டோர் டெலிவரி ஆகிவிடுகிறது. நமது உடலுக்கு வேலையை கிடையாது. இது நமது வாழ்வில் மிகப்பெரிய சோம்பேறித்தனத்தை உண்டாக்குகிறது. சோம்பேறித்தனத்தை சரி செய்ய தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். உடற்பயிற்சி செய்வதன் மூலம், சோம்பேறித்தனம் மற்றும் சோர்வு ஆகியவற்றை முறித்து புத்துணர்வு பெற முடியும்.

    தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும். அதனால் ஒரு நாளைக்கு தினசரி சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் பணி புரிந்து வருகின்றனர். வீட்டில் உள்ள பணிகள் மற்றும் அலுவலக பணிகள் என அனைத்திலும் உள்ள பெண்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்க்கு நேரம் கிடைப்பது இல்லை. ஆனால் அனைத்து பணிகளையும் செய்வதற்கு, நமது உடல் ஆரோக்கியம் அவசியமான ஒன்று. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி மிகவும் அவசியமான ஒன்று.

    நாம் செய்யும் வேலைகளை எவ்வளவு அவசியமானதாக கருதுகிறோமோ, அதுபோல பெண்கள் உடற்பயிற்சி செய்வதும் அவசியமான ஒன்று. உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் வலி, அசதி, மற்றும் உடலில் தேங்கி உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைக்க உதவுகிறது.

    Next Story
    ×