என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "U19 ஆசிய கோப்பை"

    • பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் ஊக்கத்தொகையாக தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
    • மொசின் நவ்வி தலா ரூ.16 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்தார்.

    கராச்சி:

    12-வது இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து 2-வது முறையாக மகுடம் சூடியது. 172 ரன்கள் குவித்த அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சமீர் மின்ஹாஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.

    இளையோர் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியதும் அந்த வெற்றியை திருவிழா போல் அவர்கள் கொண்டாடினர். நேற்று அதிகாலை தாயகம் திரும்பிய அந்த அணி வீரர்களுக்கு சீனியர் வீரர்களுக்கு கொடுப்பது போன்று தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நேரத்திலும் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

    பாகிஸ்தான் இளம் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் அவர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.1 கோடி (இந்திய மதிப்பில் ரூ.32 லட்சம்) வழங்கப்படும் என்று அறிவித்தார். அத்துடன் அவர்களை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து விருந்தளிக்க உள்ளார். முன்னதாக அவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நவ்வி தலா ரூ.16 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்தார்.

    • U19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது.

    துபாயில் நடந்த U19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 347 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 156 ரன்களில் சுருண்டு 191 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

    இந்தியா அணி பேட்டிங் செய்த போது 5-வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அலி ராசா வீசினார். அந்த ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர் என பறக்கவிட்டார். ஆனால், அதே ஓவரில் வைபவ் 26 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    விக்கெட் விழுந்த உற்சாகத்தில் பந்துவீச்சாளர் அலி ராசா, வைபவ் சூர்யவன்ஷிக்கு மிக அருகில் சென்று, அவர் முகத்திற்கு நேராக ஆக்ரோஷமாக கத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது வைபவ்விற்கு கோபத்தை ஏற்படுத்தியது.

    பெவிலியன் திரும்பும் போது கடுப்பான வைபவ் சூர்யவன்ஷி, அலி ராசாவை பார்த்து முறைத்தபடியே, திடீரென தனது காலை கையால் சுட்டிக்காட்டி ஏதோ சைகை செய்தார். "நீ என் காலில் இருக்கும் ஷூ.." என்பது போல அவர் சைகை செய்தார்.

    மைதானத்தில் அவுட் ஆகி வெளியேறும் போது, எதிரணி வீரரை பார்த்து ஷூவை சுட்டிக்காட்டி வம்பிழுத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பி உள்ளது. வெறும் 14 வயதான வைபவ் களத்தில் இப்படியா நடந்து கொள்வது? என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனது ஓவரில் 3 சிக்சர் அடித்த பேட்டரின் விக்கெட்டை வீழ்த்தும் போது எந்தவொரு பந்து வீச்சாளரும் ஆக்ரோஷமாக கொண்டாடுவார்கள் அதைதான் அவரும் செய்திருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

    • பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது.
    • அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.

    19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    லீக் போட்டியில் இந்தியாவிடம் மட்டும் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டி UAE இல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.

    இந்திய அணி தரப்பில் தீபேஸ் ரவீந்திரன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 348 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 26.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்து 191 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இந்த வெற்றியின் மூலம் 19 வயதுக்குட்பட்ட வருக்கான 12-வது ஆசிய கோப்பையை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. 172 ரன்கள் விளாசிய சமீர் மின்ஹாஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் U19 ஆசிய கோப்பை வெல்வது இதுவே முதல்முறை ஆகும்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.

    19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    லீக் போட்டியில் இந்தியாவிடம் மட்டும் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டி UAE இல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.

    இந்திய அணி தரப்பில் தீபேஸ் ரவீந்திரன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 348 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது. இந்த இமாலய இலக்கை துரத்தி இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    • இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 138 ரன்கள் எடுத்தது.
    • இந்திய தரப்பில் ஹெனில் படேல், கனிஷ்க் சௌஹான் ஆகியோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    துபாய்:

    19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் இன்று நடக்கும் அரையிறுதியில் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது.

    இந்த போட்டி இன்று காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டியது. மழை காரணமாக டாஸ் கூட போடமுடியாமல் இருந்தது. இதனையடுத்து போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து கேப்டன் விமத் தின்சாரா மற்றும் சாமிக ஹீனடிகல ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்தது. 32 ரன்கள் எடுத்த போது தின்சாரா ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 7-வது விக்கெட்டுக்கு சாமிக ஹீனடிகலவுடன் செத்மிகா செனவிரத்ன ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி 52 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தது. இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 138 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஹெனில் படேல், கனிஷ்க் சௌஹான் ஆகியோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர் கொண்டது.
    • பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

    19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ்மாத்ரே தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 234 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்தது.

    இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர் கொண்டது. மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 16 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து இருந்தது. ஆயுஸ்மாத்ரே 38 ரன்னிலும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யவன்ஷி 5 ரன்னிலும், மல்கோத்ரா 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    தொடர்ந்து இந்த ஆட்டத்தின் முடிவில், 46.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 240 ரன்களை எடுத்தது. இதனால், 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக ஹூசைபா அஹ்சான் 70 ரன்கள் குவித்தார். தொடர்ந்து, ஃபர்ஹான் யூசப் 23 ரன்களிலும், உஸ்மான் கான் 16 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர். தொடர்ந்து, அலி ராசா, சமீர் மின்ஹாஸ், அகமது ஹூசைன், ஹம்சா சாஹூர், அப்துல் சுபன், முகமது சய்யம், நிக்கப் சாஃபிக் உள்ளிட்டோர ஒற்றை இலக்கில் ஆவுட் ஆகினர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணி 41.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம், பாகிஸ்தான் அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    • இந்தியா 42.4 ஓவர்களில் 188 ரன்னில் சுருண்டது.
    • வங்காளதேசம் 42.5 ஓவரில் இலக்கை எட்டியது.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு ஏமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.

    நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு அரையிறுதியில் இந்தியா- வங்காளதேச அணிகள் மோதின.

    இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முஷின் கான் 50 ரன்களும, முருகன் அபிஷேக் 62 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 42.4 ஓவர்களில் 188 ரன்னில் சுருண்டது. வங்காளதேச அணி சார்பில் மரூஃப் மிரிதா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களம் இறங்கியது. அந்த அணி 34 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், அர்புல் இஸ்லாம் 90 பந்துகளில் 94 ரன்களும், அஹ்ரார் அமின் 101 பந்தில் 44 ரன்களும் அடிக்க வங்காளதேசம் 42.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலில் பேட்டிங் செய்து 47.5 ஓவரில் 193 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க வீரர் ஆர்யான்ஷ் சர்மா 46 ரன்களும், கேப்டன் அஃப்சல் கான் 55 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் உபைத் ஷா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. அந்த அணியின் அசான் அவைஸ் 41 ரன்னில் ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சாத் பைக் 50 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 49.3 ஓவரில் 182 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    ×