என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இறுதிப்போட்டி: இந்தியாவை வீழ்த்தி U19 ஆசிய கோப்பையை கைப்பற்றியது பாகிஸ்தான்
- பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது.
- அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.
19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
லீக் போட்டியில் இந்தியாவிடம் மட்டும் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டி UAE இல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி தரப்பில் தீபேஸ் ரவீந்திரன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 348 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 26.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்து 191 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் 19 வயதுக்குட்பட்ட வருக்கான 12-வது ஆசிய கோப்பையை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. 172 ரன்கள் விளாசிய சமீர் மின்ஹாஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் U19 ஆசிய கோப்பை வெல்வது இதுவே முதல்முறை ஆகும்.






