என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலித்தொழிலாளி கைது"

    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • ஒருவரை ஒருவரை தீவிரமாக காதலித்து வந்தனர்.

    குனியமுத்தூர்

    கோவையில் கடந்த சில ஆண்டுகளாக உக்கடம் மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை முழுவது போக்குவரத்து நெருக்கடியில் திணறுகிறது. குறிப்பாக உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிராக பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது.

    பாலக்காடு சாலையில் இருந்து கோவைக்கு வரும் அனைத்து பேருந்துகளும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு தான் செல்லும். அதேபோன்று பொள்ளாச்சி ரோட்டில் இருந்து கோவைக்கு வரும் அனைத்து பேருந்துகளும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு தான் செல்லும். காருண்யா, ஆலந்துறை, பேரூர் ,செல்வபுரம் போன்ற பகுதியில் இருந்து வரும் பேருந்துகளும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவது வழக்கம்.

    அனைத்து பேருந்துகளும் சம்பந்தப்பட்ட இந்த ஒரே இடத்தில் குவிந்து வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசலும், மக்களின் சலசலப்பு எந்த நேரமும் இப்பகுதியில் காணப்படும். ஒரே இடத்தில் கட்டுக்கடங்காத மக்கள் குவிந்து வருவதால் பதட்டம் ஏற்படுவது போன்ற சூழ்நிலையை காண முடிகிறது.

    கோவையில் இருந்து உக்கடம் பகுதியை கடந்து செல்லும் பேருந்துகள், உக்கடம் பேருந்து நிலையத்திற்குள் சென்று விடுவதால் சாலையின் வலது பகுதியில் நெருக்கடியை காண முடிவதில்லை.

    ஆனால் சாலையின் இடது பகுதியில் ஒரே நேரத்தில் ஏராளான பேருந்துகள் சாலையை சூழ்ந்தபடி நிறுத்தி பயணிகளை ஏற்றி மற்றும் இறக்கி வருகின்றனர்.

    பயணிகளை ஏற்றி இறக்கும் அந்த நேரத்திற்குள் பின்னால் வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் காட்சியை காணப்படுகிறது.

    எனவே உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள அந்த பஸ் நிறுத்தத்தை, உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிரே செல்லும் செல்வபுரம் பைபாஸ் சாலையில் மாற்றி அமைத்தால் மட்டுமே இந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறையும்.

    பொதுமக்களும் நெருக்கடி இல்லாமல் பஸ்சில் இருந்து இறங்கி செல்ல வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அன்றாடம் உக்கடம் பகுதியை கடந்து வரும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.
    • மனைவியை வெட்டி கொன்ற கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, கொசவபட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். பனை மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 50). இவர்களுக்கு சந்தானகிருஷ்ணன் என்ற மகனும், வீரமணி என்ற மகளும் உள்ளனர்.

    ஆறுமுகம் மற்றும் விஜயலட்சுமி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மது போதையில் வீட்டுக்கு வந்த ஆறுமுகத்தை விஜயலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் பனைமரத்து பாலை வெட்டும் அரிவாளால் விஜயலட்சுமி யின் கழுத்தில் வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் அம்பிளிக்கை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ஊத்தங்கரை அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வயிற்றிலேயே இறந்த குழந்தையை ஆபரேசன் மூலம் டாக்டர்கள் அகற்றினர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அருகே புதூர்பூகுனை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    அந்த மாணவியின் தாயார் கணவரை பிரிந்து கோவையில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் பணியாற்றி வருகிறார்.

    மாணவி தனது தாத்தா-பாட்டியுடன் புதூர் பூகுனை பகுதியில் வசித்து வந்தார். இங்கிருந்து தான் தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிறு பகுதி வீக்கம் அடைந்து வலியால் அவதியடைந்தார்.

    இதுகுறித்து அவரது தாத்தா கோவையில் உள்ள மாணவியின் தாயாருக்கு தகவல் கொடுத்தார். அவர் தனது மகளை ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு கல்லூரி மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், மாணவியின் வயிற்றில் 7 மாத குழந்தை இறந்து கிடப்பதாகவும் தெரிவித்தனர்.

    பின்னர் மாணவியை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு ஆபரேசன் மூலம் இறந்த குழந்தையை வெளியே எடுத்தனர். மாணவியின் உயிரை காப்பாற்றி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாயார் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 3 குழந்தைகளின் தந்தையான தமிழரசன் (வயது30) கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதுபற்றி மாணவி யாரிடமும் சொல்லாமல் இருந்து உள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் ஆனது தெரியவந்தது.

    போலீசார் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததால் தமிழரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.

    திருக்கனூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே விநாயகம்பட்டை சேர்ந்த 15 வயது மாணவி சோரப்பட்டு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அந்த மாணவி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் அந்த மாணவி இல்லை.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் திருக்கனூர் போலீசில் புகார் செய்தனர். புகாரில் தங்களது மகளை அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கூலித்தொழிலாளி கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு கடத்தல் பிரிவில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரனையில் மாணவியை கூலித்தொழிலாளி கடத்தி சென்று நோணாங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கவைத்திருந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் நோனாங்குப்பத்துக்கு சென்று மாணவியை மீட்டனர். கூலித்தொழிலாளியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கூலித்தொழிலாளிக்கு 17 வயதே ஆவதால் அவரை அரியாங்குப்பம் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    ×