மது குடித்ததை கண்டித்ததால் மனைவியை வெட்டி கொன்ற கணவர் கைது

குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.மனைவியை வெட்டி கொன்ற கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்
கைது செய்யப்பட்ட ஆறுமுகம்
கைது செய்யப்பட்ட ஆறுமுகம்
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, கொசவபட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். பனை மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 50). இவர்களுக்கு சந்தானகிருஷ்ணன் என்ற மகனும், வீரமணி என்ற மகளும் உள்ளனர்.

ஆறுமுகம் மற்றும் விஜயலட்சுமி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மது போதையில் வீட்டுக்கு வந்த ஆறுமுகத்தை விஜயலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் பனைமரத்து பாலை வெட்டும் அரிவாளால் விஜயலட்சுமி யின் கழுத்தில் வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் அம்பிளிக்கை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com