என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே ஊழியர் கைது"

    இடப்பிரச்சினையில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த ரெயில்வே ஊழியர் தலைமை செயலகத்திற்கு போன் செய்து மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஆழ்வார்குறிச்சி:

    தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள தாட்டான்பட்டியை சேர்ந்தவர் ஜெபஸ்தியான். இவரது மகன் அந்தோணி ராஜ் (வயது34). இவர் ரெயில்வேயில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    ஜெபஸ்தியானுக்கு சொந்தமான இடம் தாட்டான்பட்டி ஊருக்கு வெளியே உள்ளது. அதன் அருகே அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கு இடம் உள்ளது. இவர்கள் 2 பேருக்கும் இடையே அந்த இடம் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

    இதையடுத்து ஜெபஸ்தியான் சமீபத்தில் ஆழ்வார்குறிச்சி போலீசில் இடப்பிரச்சினை தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

    அதனை விசாரித்த போலீசார் தாட்டான்பட்டியில் பாதி பகுதி நெல்லை மாவட்டம் வி.கே.புரம் போலீஸ் நிலைய எல்லைக்குள் வரும் என்பதால் நாங்கள் இடத்தை ஆய்வு செய்து அதன் பின்னர் விசாரணை செய்கிறோம் என்று தெரிவித்து உள்ளனர்.

    எனினும் இடம் தொடர்பாக விரைந்து விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் அந்தோணிராஜ் ஆத்திரம் அடைந்தார். நேற்று அவர் போலீஸ் அவசர உதவி எண்ணான 100-க்கு போன் செய்து பேசி குடிபோதையில் உளறியதாக கூறப்படுகிறது.

    அவர் சென்னை தலைமை செயலகத்திற்கு போன் செய்து ‘முதல்-அமைச்சர் வீட்டுக்கோ அல்லது தலைமை செயலகத்திற்கோ போன் செய்து வெடிகுண்டு வைத்திருப்பதாக யாரேனும் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் அல்லவா’ என்று பேசி உள்ளார்.

    மேலும் மது போதையில் அவர் மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஆழ்வார்குறிச்சி போலீசார் நேற்றிரவு அந்தோணிராஜை கைது செய்தனர்.
    தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார். #JammuKashmir #CRPF #RailwayEmployee
    புனே:

    காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கு கவச வாகனங்கள் உடன் சென்றன. மாலை 6 மணிக்குள் அவர்கள் சென்றடைய திட்டமிட்டிருந்தனர்.

    அவர்களது வாகனங்கள், ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

    அப்போது பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன.  இதில் துணை ராணுவ படையினர் 44 பேர் பலியாகி உள்ளனர்.



    இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர்.

    இந்நிலையில், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட நபர் இன்று கைது செய்யப்பட்டார்.

    அவரது பெயர் உபேந்திரா பகதூர் சிங் (39).  இவர் ரெயில்வே துறையில் இளநிலை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.

    இதுபற்றி மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, இன்று காலை லோனாவாலா பகுதியில் சிவாஜி சவுக் என்ற இடத்தில் உள்ளூர் குடியிருப்புவாசிகள் சிலர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.

    அந்த இடத்திற்கு வந்த சிங் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷங்களை எழுப்பினார்.  இதனால் அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அவரை அடிக்க முற்பட்டனர்.

    ஆனால் அங்கு குவிக்கப்பட்டு இருந்த காவல் துறை அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்தனர்.  அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவருக்கு பிப்ரவரி 18ந்தேதி வரை போலீஸ் காவல் விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. #JammuKashmir #CRPF #RailwayEmployee
    மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    பெரம்பூர்:

    திரு.வி.க. நகர் கோபாலபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (36). ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி கல்பனா. 10 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சுரேஷ்-கல்பனா தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சுரேஷ் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி மனைவி கல்பனா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக, சுரேஷ் திரு.வி.க. நகர் போலீசில் புகார் செய்தார். உடல் மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    பிரேத பரிசோதனையில் கல்பனா கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது. தெரியவந்தது.

    இதையடுத்து சுரேசிடம் திரு.வி.க. நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது தன்னை தட்டிக்கேட்ட மனைவி கல்பனாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது.

    இதையடுத்து திரு.வி.க. நர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், ரெயில்வே ஊழியர் சுரேசை கைது செய்தார். அவர் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டது.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சுரேஷ், நீதிபதி உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரெயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையைச் சேர்ந்த 13 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை மாணவி ஊரின் காட்டுப் பகுதிக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆதிமூலம் என்பவரின் மகன் தண்டீஸ்வரன் (வயது 30) என்பவர் மாணவியிடம் ஆபாச சைகை காட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    உடனே அவர்கள் கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தண்டீஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைதான தண்டீஸ்வரன் ரெயில்வே ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பழனியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    பழனி:

    பழனி பழைய ரெயில்வே காலனியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது55). பழைய ஆயக்குடி அருகே அண்ணாநகர் ரெயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவனை தனது அறைக்கு அழைத்துள்ளார்.

    சிறுவனை அறையில் வைத்து ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன் சத்தம் போட்டான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டனர்.

    சிறுவனை பரமேஸ்வரனிடம் இருந்து மீட்டனர். பின்பு பழனி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் பரமேஸ்வரன் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனைதொடர்ந்து பரமேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

    ×