என் மலர்
நீங்கள் தேடியது "வாட் வரி"
சென்னை:
பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். பெட்ரோல் லிட்டர் 85 ரூபாயையும், டீசல் லிட்டர் 75 ரூபாயையும் எட்டுகிறது.
இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் ஏழை-எளிய, நடுத்தர மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வை கண்டு கலக்கம் அடைந்துள்ளனர்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. கூலி வேலை செய்யக் கூடியவர்கள், தனியார் நிறுவனங்களில் மாத சம்பளம் பெறக் கூடியவர்கள், சிறு தொழில் செய்து பிழைப்பு நடத்துபவர்களின் மாத வருவாயில் ‘துண்டு’ விழுகிறது.
கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த பெட்ரோல்- டீசல் விலை உச்சத்தை எட்டும் நிலைக்கு வந்துவிட்டது. இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க தலைவர் முரளி கூறியதாவது:-
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. சாதாரண ஏழை மக்களை இது கடுமையாக பாதித்து வருகிறது. அண்டை மாநிலமான ஆந்திராவில் பெட்ரோல்-டீசல் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
மக்கள் சிரமத்திற்கு ஆளாவதை பார்த்த ஆந்திர அரசு மாநில அரசு விதித்த வாட் வரியை குறைத்துள்ளதால் பெட்ரோல்-டீசல் விலை குறைந்துள்ளது. அதுபோல தமிழக அரசும் ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும். தமிழக மக்களின் நலன் கருதி வரியை குறைத்தால் பெரும் சுமையில் இருந்து பாதுகாக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனை தொடர்ந்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வாட் வரி குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளார். #petroldiesel
பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு சர்வதேச மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. இதனால் பெட்ரோல்-டீசல் விலையானது தங்கம் விலை போல் தினமும் ஏறி வருகிறது.
தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80-ஐ தாண்டி விட்டது. விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 10-ந் தேதி பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய பந்த் நடத்தியது. இது ஆளும் பா.ஜனதாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் 5 மாநில சட்டசபை தேர்தலும், தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் வர இருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தால் தேர்தலில் வெற்றி பாதிக்கப்படுமோ என்று பா.ஜனதா கருதுகிறது. இதையடுத்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இதில் மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தும் போது மத்திய-மாநில அரசுகளின் மதிப்பு கூட்டு வரியும் (வாட் வரி) உயர்ந்து விடுகிறது. இதனால்தான் பெட்ரோல்- டீசல் விலை இரு மடங்காக உயர்கிறது.
எனவே வாட்வரியை குறைத்தால் பெட்ரோல்- டீசல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. எனவே மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலை சந்திக்கும் பா.ஜனதா கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்கனவே பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரியை குறைத்து விட்டது. இதே போல் மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களும் வாட் வரியை குறைக்க முடிவு செய்துள்ளன. இதே போல் பா.ஜனதா ஆளும் மற்ற மாநிலங்களிலும் வாட் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே மராட்டியம், மத்திய பிரதேசம், ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில்தான் வாட் வரி அதிகம் விதிக்கப்படுகிறது. வாட் வரி மூலம் அதிக வருவாய் கிடைப்பதால் வரியை குறைக்க பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநிலங்கள் மறுத்து விட்டன. #Petrolpricehike #Centralgovt #VAT
பெட்ரோல், டீசல் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.37 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.59 ஆக உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.







