என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமெடி நடிகர்"

    • ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.
    • தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார்.

    காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    இத்திரைப்படத்தில் சூரியுடன், சுவாசிகா, ராஜ்கிரண், ஜெய பிரகாஷ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தாய் மாமனுக்கும் 6 வயது சிறுவனுக்கும் இடையே உள்ள பாசப்பந்தத்தை விவரிக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

    தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார். நகைச்சுவை கதாபாத்திரத்துடன், கதையின் நாயகனாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி, கோலமாவு கோகிலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

    இந்த நிலையில் தற்போது ஜோரா கைய தட்டுங்க என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விநீஷ் மில்லினியம் இயக்கியுள்ளார். வாமா எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி இப்படத்தை தயாரித்துள்ளார். எஸ்.என். அருணகிரி இசையமைகத்துள்ளார் இத்திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.

    ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.

    இந்த மூன்று திரைப்படங்களின் கதாநாயகர்களான யோகி பாபு, சூரி, சந்தானம் சினிமா துறையில் முன்னணி நகைச்சுவை நடிகர்களாக தங்களை தக்க வைத்துள்ளனர்.

    காமெடியில் மட்டும் நாங்கள் கில்லாடிகள் இல்லை, கதாநாயகராகவும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று மூன்று பேரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

    அதுவும் இவர்கள் நடித்த திரைப்படங்களும் இன்று ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், இன்று ரிலீஸ் ஆன மூன்று படங்களில் மக்கள் மனதை கவர்ந்த கதாநாயகன் யார் என்று பார்ப்போம...

    சூரி நடித்து வெளியான மாமன் திரைப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் உணர்வுப்பூவமான கதையாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    அடுத்ததாக, சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் த்ரில்லர் காமெடி திரைப்படங்கள் பட்டியலில் இணைந்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல்.

    தொடர்ந்து, யோகி பாபுவின் ஜோரா கைய தட்டுங்க திரைப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது.

    ஹீரோவாகியுள்ள காமெடி நடிகர் ஒருவருக்கு ஹீரோயின்களுடன் டூயட் பாட வேண்டும் என ஆசை வந்துள்ளதாம். #Actor #ComedyActor
    தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, பின்னர் காமெடியனாக வளர்ந்தவர் இப்போது கை நிறைய படங்களுடன், கதாநாயகனாகவும் நடித்து வருகிறாராம்.

    ஆரம்பத்தில் எனக்கு இதெல்லாம் சரிபட்டு வராது என கூறிவந்த நடிகருக்கும், தற்போது டூயட் பாடும் ஆசை வந்துவிட்டதாம். இதனால் தன்னை தேடி வரும் புதிய இயக்குனர்களிடம், படத்தில் தனக்கு ஒரு ஜோடி வேண்டும், டூயட் வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை முன்வைக்கிறாராம். இதனால் புதுமுக நடிகைகளை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாம். 
    பல படங்களில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கும் யோகி பாபு, இந்த வருடத்தில் அதிக படம் நடித்த காமெடி நடிகராகி இருக்கிறார். #YogiBabu
    என்.எஸ்.கலைவாணர்- டி.ஏ.மதுரம், தங்கவேலு- சரோஜா வரிசையில் தமிழ் சினிமாவில் திரையில் பார்த்தவுடன் ரசிகர்கள் சிரித்தது நடிகர்கள் கவுண்டமணி செந்தில் கூட்டணியைத்தான்.

    அதற்குப் பின் நடிகர் வடிவேலு அந்த இடத்தை பிடித்தார். அவருக்குப் பின் அந்த இடத்தை எந்த காமெடி நடிகராலும் பிடிக்க முடியவில்லை. அழகான தோற்றமும் காமெடி பஞ்ச் வசனங்களும் காமெடிக்கு அவசியம் என்பதை உடைத்து இருக்கிறார் யோகி பாபு. அவரின் வித்தியாசமான தலைமுடியே அவருக்கு குழந்தை முதல் பெரியவர் வரையிலான ரசிகர்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

    புதிய படங்களில் யோகி பாபு தவிர்க்க முடியாத நடிகராகி விட்டார். அவரது தேதி கிடைக்கவில்லை என்றால் மட்டுமே பிற காமெடி நடிகர்களை பற்றி யோசிக்கின்றனர் இயக்குநர்கள்.



    இந்த ஆண்டு 20 படங்களில் யோகி பாபு நடித்து அதிக படங்களில் நடித்த காமெடி நடிகராகி இருக்கிறார். இந்த ஆண்டு வசூலில் முன்னிலை பெற்ற சர்கார், கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் இவரது காமெடிக்காக ரசிக்கப்பட்ட படங்கள். காமெடியில் தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்ட யோகி பாபு அடுத்தடுத்து சில படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். #YogiBabu
    முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் சூரி, தனது பிறந்தநாளை மகன், மகள் வாங்கிக் கொடுத்த வீட்டில் கொண்டாடி இருக்கிறார். #Soori #HappyBirthdaySoori
    தமிழ் படங்களில் சூரி தலைகாட்டும் படங்களுக்கு தனிமவுசு இருக்கிறது. இவர் கதாநாயகர்களுடன் கைகோர்த்து நடித்த ‘ரஜினிமுருகன்’, ‘அரண்மனை–2’, ‘மருது’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ உள்ளிட்ட படங்கள் அனைத்தும் பேசப்படும் படங்களாகவே அமைந்துள்ளன.

    மேலும் சமீபத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் இவருடைய காமெடியும் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இன்னும் பல படங்களில் இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கிறது.

    இவர் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். ஆனால், சூரியோ, மகள் வெண்ணிலா, மகன் சர்வான் வாங்கிக் கொடுத்த பிரமாண்டமான வீட்டில் முதன் முறையாக ஆடம்பரமாக கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

    பிரபல காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி, தனது 80வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடி இருக்கிறார். #VenniradaiMoorthy
    பிரபல காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. வக்கீல் படித்த மூர்த்தி, கலை மீதுள்ள ஆர்வத்தால் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து, இயக்குனர் ஸ்ரீதரின் ’வெண்ணிற ஆடை’ படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானார்.1965-ல் வந்த ’வெண்ணிற ஆடை’ படத்தில் மூர்த்தியோடு சேர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நிர்மலா ஆகியோரும் அறிமுகமானார்கள். அந்தப் படத்துக்குப் பிறகு மூர்த்திக்கும், நடிகை நிர்மலாவுக்கும் ’வெண்ணிற ஆடை’ என்கிற பெயர் நிலைத்துப் போனது.  

    ’’பப்..பப்.., புர்..ர்..! பாப்பா... ஒன்னப் பாத்தா எனக்கு பீறிட்டுக்கிட்டு வருது, சிரிப்பு...!’, என அவர், ஸ்டெயிட் மீனிங்கிலேயே பேசினாலும், அந்தக் காமெடிக்கு பெண்கள் பக்கம் இருந்தும் ’குபீர்’ சிரிப்பு வரும்! 

    தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடியனாக மாறிய ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடன் நடித்த மணிமாலாவை காதல் திருமணம் செய்து கொண்டார். பெரியத்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வந்த இவர், முதுமையின் காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்கு முழுக்குப் போட்டார்.



    நேற்று ’வெண்ணிறஆடை’ மூர்த்திக்கு 80-வது பிறந்த நாள். இந்த பிறந்த நாளை அவர் தனது மனைவி மணிமாலாவுடன் எளிமையாக கொண்டாடினார். ’வெண்ணிற ஆடை’ மூர்த்தியுடன் பல படங்களில் நடித்திருக்கும் பழம்பெரும் நடிகை சச்சு, நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
    ×