என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிடி நெக்ஸ்ட் லெவல்"

    • அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்துள்ள படம் லெவன்.
    • எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் டிடி நெக்ஸ் லெவல்.

    வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றது. மொழி வேறுபாடின்றி ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களின் சௌக்ரியத்தோடு பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என பார்க்கலாம்.

    டிடி நெக்ஸ் லெவல்

    எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் டிடி நெக்ஸ் லெவல். இதில் செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் . இப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

    ஆலப்புழா ஜிம்கானா

    காலித் ரஹ்மான் இயக்கத்தில் வெளியான மலையாள படம் ஆலப்புழா ஜிம்கானா. இப்படம் பாக்சிங்கை மையமாக வைத்து அதில் காதல் நகைச்சுவை என கதைக்களம் அமைந்திருக்கும். இதில் நஸ்லென், லுக்மன் அவரன் , கணபதி , அனகா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது.


    சுபம்

    சமந்தா தயாரிப்பில் உருவான முதல் தெலுங்கு படம் சுபம் . இதில் ஹர்ஷித் ரெட்டி, கவிரெட்டி ஸ்ரீனிவாஸ், ஷ்ரியா கொந்தம், சரண் பெரி, ஷ்ரவணி லட்சுமி, ஷாலினி கொண்டேபுடி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இப்படம் நாளை ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கிறது.

    லெவன்

    அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்துள்ள படம் லெவன். விறுவிறுப்பான புலனாய்வு த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ரியா ஹரி , ஷசாங் , ரவி வர்மா , கீர்த்தி தாம ராஜூ , அபிராமி , திலீபன் , ரித்விகா ஆகியோ நடித்துள்ளார்கள். இப்படம் வருகிற ஜூன் 13 ஆம் தேதி ஆஹா தமிழ் மற்றும் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. படத்தில் இடம் பெற்ற கிளைமாக்ஸ் டிவிஸ்ட் பலரால் பாராட்டப்பட்டது.

    படக்களம்

    மனு ஸ்வராஜ் இயக்கத்தில் சூரஜ் வெஞ்சமூடு, ஷரப் யு தீன் , சந்தீப் பிரதீப் விஜய் பாபு ஆகியோர் நடித்துள்ள படம் 'படக்களம்'. கடந்த ஜூன் 10 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இப்படம் ஒரு உடல்ம்பில் இருந்து மற்றொரு உடம்பை கட்டுப்படுத்தும் சக்தியை வைத்து காமெடியாக உருவாகியுள்ள திரைப்படமாகும்.

    கேசரி சாப்டர் 2

    கரன் சிங் தியாகி இயக்கத்தில் அக்ஷய் குமார் , மாதவன் , அனன்யா பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கேசரி சேப்டர் 2. இப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.

    • பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியானது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம்
    • திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில்  வெளியானது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம். இப்படத்தை ஆர்யாவின் தி ஷோ பீபல் நிறுவனம் தயாரித்தது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தில் சந்தானத்துடன் கீதிகா, செல்வராகவன், கவுதம் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தில் சந்தானம் ஒரு திரைப்படம் விமர்சகர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு அமானுஷ்ய சக்தி மூலம் ஒரு திரைப்படத்திற்குள் குடும்பத்துடன் சென்றுவிடுகிறார். அங்கு இருந்து எப்படி வெளி வருகிறார் என்பதே படத்தின் கதையாகும்.இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 13 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    • பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ளது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம்.
    • படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ளது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம். இப்படத்தை ஆர்யாவின் தி ஷோ பீபல் நிறுவனம் தயாரித்தது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தில் சந்தானத்துடன் கீதிகா, செல்வராகவன், கவுதம் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.
    • தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார்.

    காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    இத்திரைப்படத்தில் சூரியுடன், சுவாசிகா, ராஜ்கிரண், ஜெய பிரகாஷ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தாய் மாமனுக்கும் 6 வயது சிறுவனுக்கும் இடையே உள்ள பாசப்பந்தத்தை விவரிக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

    தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார். நகைச்சுவை கதாபாத்திரத்துடன், கதையின் நாயகனாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி, கோலமாவு கோகிலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

    இந்த நிலையில் தற்போது ஜோரா கைய தட்டுங்க என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விநீஷ் மில்லினியம் இயக்கியுள்ளார். வாமா எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி இப்படத்தை தயாரித்துள்ளார். எஸ்.என். அருணகிரி இசையமைகத்துள்ளார் இத்திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.

    ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.

    இந்த மூன்று திரைப்படங்களின் கதாநாயகர்களான யோகி பாபு, சூரி, சந்தானம் சினிமா துறையில் முன்னணி நகைச்சுவை நடிகர்களாக தங்களை தக்க வைத்துள்ளனர்.

    காமெடியில் மட்டும் நாங்கள் கில்லாடிகள் இல்லை, கதாநாயகராகவும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று மூன்று பேரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

    அதுவும் இவர்கள் நடித்த திரைப்படங்களும் இன்று ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், இன்று ரிலீஸ் ஆன மூன்று படங்களில் மக்கள் மனதை கவர்ந்த கதாநாயகன் யார் என்று பார்ப்போம...

    சூரி நடித்து வெளியான மாமன் திரைப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் உணர்வுப்பூவமான கதையாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    அடுத்ததாக, சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் த்ரில்லர் காமெடி திரைப்படங்கள் பட்டியலில் இணைந்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல்.

    தொடர்ந்து, யோகி பாபுவின் ஜோரா கைய தட்டுங்க திரைப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது.

    • பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ளது 'டிடி நெக்ஸ்ட் லெவல்'.
    • ஆர்யா தயாரித்திருக்கும் இப்படம் நாளை வெளியாக உள்ளது.

    பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ளது 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. ஆர்யா தயாரித்திருக்கும் இப்படம் நாளை வெளியாக உள்ளது.

    இந்த படத்தில் வரும் 'கோவிந்தா கோவிந்தா' பாடலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இந்துக்களின் மனம் புண்படும் வகையில் 'கோவிந்தா கோவிந்தா கிசா 47' பாடலை வைத்திருக்கிறார்கள் என புகார்கள் எழுந்தது.

    இதனை தொடர்ந்து, படத்தில் பெருமாள் குறித்து வரும் பாடலை நீக்க நடவடிக்கை வேண்டுமென்று திருப்பதி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஜனசேனா கட்சியினர் மனு அளித்தனர். மேலும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட தயாரிப்பாளர் மீது திருமலை காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் அளித்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக அப்படத்தில் இடம் பெற்ற கிஸா 47 பாடலை படக்குழு நீக்கியுள்ளது.

    • படத்தில் வரும் ‘கோவிந்தா கோவிந்தா’ பாடலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
    • திரைப்பட தயாரிப்பாளர் மீது திருமலை காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

    பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. ஆர்யா தயாரித்திருக்கும் இப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வரும் 'கோவிந்தா கோவிந்தா' பாடலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இந்துக்களின் மனம் புண்படும் வகையில் 'கோவிந்தா கோவிந்தா கிசா 47' பாடலை வைத்திருக்கிறார்கள் என புகார்கள் எழுந்துள்ளது.

    இதனை தொடர்ந்து, படத்தில் பெருமாள் குறித்து வரும் பாடலை நீக்க நடவடிக்கை வேண்டுமென்று திருப்பதி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஜனசேனா கட்சியினர் மனு அளித்துள்ளனர். மேலும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட தயாரிப்பாளர் மீது திருமலை காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.



    இந்த நிலையில், 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய பாடலை நீக்கக் கோரியும், ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டும் நடிகர் சந்தானம், பட தயாரிப்பு நிறுவனத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

    ×