என் மலர்
சினிமா

முதல் இடம் பிடித்த யோகி பாபு
பல படங்களில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கும் யோகி பாபு, இந்த வருடத்தில் அதிக படம் நடித்த காமெடி நடிகராகி இருக்கிறார். #YogiBabu
என்.எஸ்.கலைவாணர்- டி.ஏ.மதுரம், தங்கவேலு- சரோஜா வரிசையில் தமிழ் சினிமாவில் திரையில் பார்த்தவுடன் ரசிகர்கள் சிரித்தது நடிகர்கள் கவுண்டமணி செந்தில் கூட்டணியைத்தான்.
அதற்குப் பின் நடிகர் வடிவேலு அந்த இடத்தை பிடித்தார். அவருக்குப் பின் அந்த இடத்தை எந்த காமெடி நடிகராலும் பிடிக்க முடியவில்லை. அழகான தோற்றமும் காமெடி பஞ்ச் வசனங்களும் காமெடிக்கு அவசியம் என்பதை உடைத்து இருக்கிறார் யோகி பாபு. அவரின் வித்தியாசமான தலைமுடியே அவருக்கு குழந்தை முதல் பெரியவர் வரையிலான ரசிகர்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது.
புதிய படங்களில் யோகி பாபு தவிர்க்க முடியாத நடிகராகி விட்டார். அவரது தேதி கிடைக்கவில்லை என்றால் மட்டுமே பிற காமெடி நடிகர்களை பற்றி யோசிக்கின்றனர் இயக்குநர்கள்.

இந்த ஆண்டு 20 படங்களில் யோகி பாபு நடித்து அதிக படங்களில் நடித்த காமெடி நடிகராகி இருக்கிறார். இந்த ஆண்டு வசூலில் முன்னிலை பெற்ற சர்கார், கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் இவரது காமெடிக்காக ரசிக்கப்பட்ட படங்கள். காமெடியில் தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்ட யோகி பாபு அடுத்தடுத்து சில படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். #YogiBabu
Next Story






