search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "senior Congress leader"

    இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்குக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். #ManmohanSingh #MKStalin
    சென்னை:

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு:-

    இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பல்வேறு காலங்களில் வலுவான வளர்ச்சி சார்ந்த பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க அவர் மேற்கொண்ட பணிகள் அவருடைய தெளிவான பார்வையையும், நிர்வாகத் திறமையையும் எடுத்துக் காட்டுவதோடு, இந்திய வரலாற்றில் பெருமைக்குரிய இடத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ManmohanSingh #MKStalin
    முன்னாள் மந்திரி குருதாஸ் காமத் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GurudasKamat #RIPGurudasKamat
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான குருதாஸ் காமத் (வயது 63), டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இருந்தபோது இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரது கார் டிரைவர் அவரை சாணக்யபுரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது.  அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் மும்பையில் இருந்து டெல்லிக்கு விரைந்தனர்.



    குருதாஸ் காமத் மறைவு குறித்து கேள்விப்பட்டதும் சோனியா காந்தி உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ‘குருதாஸ் காமத் மறைவு காங்கிரஸ் குடும்பத்திற்கு விழுந்த பெரிய அடி ஆகும். மும்பையில் காங்கிரசை கட்டமைக்க உதவிய அவர், அனைவராலும் மதிக்கப்பட்டு பாராட்டப்பட்டார். இந்த துயரம் நிறைந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என ராகுல் டுவிட் செய்துள்ளார்.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பா.ஜ.க. எம்பி கிரித் சோமையா, சிவசே எம்எல்ஏ மனிஷா காயண்டே என பல்வேறு கட்சி தலைவர்களும் குருதாஸ் காமத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். #GurudasKamat #RIPGurudasKamat
    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான குருதாஸ் காமத் காலமானார். அவருக்கு வயது 63. #GurudasKamat
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருவர் குருதாஸ் காமத்(வயது 63). காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது உள்துறை இணை மந்திரியாக பதவி வகித்தவர். தொலைத் தொடர்புத்துறை இணை மந்திரியாகவும், மும்பை காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார்.

    ராகுல் காந்தியுடன் குருதாஸ் காமத்

    இந்நிலையில், குருதாஸ் காமத்துக்கு இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக சாணக்யபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார்.  மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    குருதாஸ் காமத் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட், செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுரிஜிவாலா, மகாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்யஜீத் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GurudasKamat
    ×