என் மலர்
நீங்கள் தேடியது "Gurudas Kamat Passes Away"
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான குருதாஸ் காமத் காலமானார். அவருக்கு வயது 63. #GurudasKamat
புதுடெல்லி:

குருதாஸ் காமத் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட், செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுரிஜிவாலா, மகாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்யஜீத் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GurudasKamat
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருவர் குருதாஸ் காமத்(வயது 63). காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது உள்துறை இணை மந்திரியாக பதவி வகித்தவர். தொலைத் தொடர்புத்துறை இணை மந்திரியாகவும், மும்பை காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார்.

ராகுல் காந்தியுடன் குருதாஸ் காமத்
இந்நிலையில், குருதாஸ் காமத்துக்கு இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக சாணக்யபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.






