என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanjeev Goenka"

    • ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி 14 வயது 23 நாட்களில் அறிமுகம் ஆகியுள்ளார்.
    • வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசினார்.

    ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி இம்பேக்ட் பிளேயர் அடிப்படையில் தொடக்க வீரராக களம் இறங்கினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சூர்யவன்ஷி 14 வயது 23 நாட்களில் அறிமுகம் ஆகியுள்ளார்.

    மேலும், வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

    அறிமுகப் போட்டியிலேயே அபாரமாக விளையாடிய 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியை லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

    • லக்னோ அணி கடுமையான தோல்வியை தழுவியது.
    • இந்த சம்பவத்திற்கு பலரும் கருத்து தெரிவித்தனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்களில் பரபரப்புக்கு எப்போதும் பஞ்சம் இருந்ததே இல்லை. உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மிகப்பெரிய டி20 கிரிக்கெட் தொடராக ஐ.பி.எல். இருந்து வருகிறது.

    அந்த வகையில், ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதிய போட்டியில் நடைபெற்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் ஐதராபாத் அணியிடம் லக்னோ அணி கடுமையான தோல்வியை தழுவியது.

     


    தனது அணி மோசமான தோல்வியை தழுவியதை அடுத்து லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல். ராகுலை களத்தில் வைத்தே மிகவும் கடுமையாக சாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதோடு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்த நிலையில், லக்னோ அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது கே.எல். ராகுல் மற்றும் சஞ்சீவ் கோயங்கா ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பரஸ்பரம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

    ×