search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ravinder raina"

    • ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
    • ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபை அமையும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக கடந்த மாதம் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெற்றது.

    ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது சட்டசபைத் தோ்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை தோ்தல் இதுவாகும்.

    ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பா.ஜ.க., மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்பதே பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் முடிவாக உள்ளது.

    அதேநேரம், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். பா.ஜ.க. வுக்கு கடந்த முறையைவிட (25) சற்று அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பி.டி.பி.-க்கு சொற்ப இடங்களே கிடைக்கும் என்றாலும், ஆட்சி அமைப்பதில் அக்கட்சி துருப்புச் சீட்டாக மாறக்கூடும் என்று கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    அதுபோல துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்படும் 5 நியமன எம்.எல்.ஏ.க்களின் பங்களிப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்று அம்மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "ஜம்மு காஷ்மீரில் நாங்கள் 35 இடங்களில் வெற்றி பெறுவோம். சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகள் எப்படியும் 15 இடங்களை வெல்வார்கள். அவர்களிடம் கூட்டணி அமைத்து நாங்கள் ஆட்சி அமைப்போம்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்திக்கும். பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்" என்று தெரிவித்தார். 

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சத்ய பால் மாலிக், பா.ஜ.க ஆதரவாளர் தான் என அம்மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ரெய்னா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir #BJP #SatyaPalMalik #RavinderRaina
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் என்.என் வோஹ்ரா ஆளுநராக இருந்துவந்தார். அவர் சமீபத்தில் நீக்கப்பட்டு, அவரது இடத்துக்கு சத்ய பால் மாலிக் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அவர் புதிய ஆளுநராக பதவியேற்றார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்தர் மாலிக், முன்னாள் ஆளுநர் என்.என் வோஹ்ரா தனது கருத்தில் நிலையாக இருந்ததால் தான் அவரை மாற்றியதாக தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கவர்னர் சத்ய பால் மாலிக் எங்களுடைய ஆதரவாளர்தான் எனவும் ரெய்னா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் மெஹ்பூபா முப்தி தலைமையில் கூட்டணியில் நடைபெற்ற ஆட்சியை பா.ஜ.க தாமே முன்வந்து கலைத்தது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #BJP #SatyaPalMalik #RavinderRaina
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய பா.ஜ.க. தலைவராக ரவிந்தர் ரெய்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். #JKBJPchief #RavinderRaina
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பா.ஜ.க தலைவராக சட் சர்மா இருந்து வந்தார். இந்நிலையில் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய தலைவராக  ரவிந்திர ரெய்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தற்போது, ரவிந்தர் ரெய்னா மத்திய வீட்டு வசதி மற்றும் ஊரக  வளர்ச்சித்துறை மந்திரியாக பதவி வகித்துவருகிறார். ஏற்கனவே, இவர் ஜம்மு காஷ்மீர் மாநில பா.ஜ.க இளைஞர் அணி தலைவராகவும் பதவி வகித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #JKBJPchief #RavinderRaina
    ×