search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration shop workers"

    • ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
    • 3,777 அலுவலர்கள் ஈரோடு மாவட்டம் முழுவதும் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    ஈரோடு:

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்த திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்ப டுத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் காலை 8 மணி அளவில் இந்த பணியை தொடங்கினர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வீடு, வீடாக சென்று டோக்கன் மற்றும் விண்ணப்பம் வழங்கினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட வீட்டின் பெண்ணிடம் ரேஷன் கார்டை வாங்கி சோதனை செய்து அவரிடம் கையொப்பம் வாங்கி கொள்கின்றனர். பின்னர் அவரிடம் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. அதில் முகாம்களின் நேரம், நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்குகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 1,207 ரேஷன் கடைகளில் உள்ள 7 லட்சத்து 63 ஆயிரத்து 316 குடும்ப அட்டை தாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வது தொடர்பாக முகாம் 2 கட்டமாக நடைபெற உள்ளது.

    முதல் கட்டமாக 639 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 586 இடங்களில் வருகிற 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி வரை விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது.

    2-வது கட்டமாக 568 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 544 இடங்களில் வருகிற ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் 2 கட்டங்களும் சேர்த்து 1207 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 1130 இடங்களில் விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது. 3,777 அலுவலர்கள் ஈரோடு மாவட்டம் முழுவதும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் சென்று விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    • 13-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு
    • வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை.

    அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடை பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அத்தியாவசிய உணவுப் பொருள்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

    வருகிற 13-ம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ரேசன் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், போராட்டத்தின் போது பொதுமக்கள் பாதிக்காதவாறு இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு "NO WORK NO PAY" என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சுமார் 1100 நியாயவிலைக் கடைகள் உள்ளன.
    • ௧௧ அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சுமார் 1100 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இதில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக இரண்டாவது நாளாக தனித்துறை, 3 சதவீதம் அகவிலைப்படி, புதிய விற்பனை முனையம், 4 ஜி மோடம் வழங்குதல், ஓய்வுதியம், சரியான விலையில் தரமான பொருட்கள் பொட்டலமாக வழங்குதல், உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 7,8,9 தேதியில் மாநிலம் தழுவிய மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் என அறிவிக்கப்பட்டு நேற்று நடைபெற்றது.

    அதன் தொடர்ச்சியாக இன்று 2-வது நாளாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சார்பாக ௧௧ அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 700 ரேசன் கடைகள் மூடப்பட்டன. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    சம்பள உயர்வுகோரி ரேசன் கடை பணியாளர்கள் 9-ந்தேதி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார். #Rationshopstrike

    கீழ்வேளூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், நாகையில் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூட்டுறவு துறை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரே‌ஷன் கடைகளுக்கு சரியான எடையிலும், கார்டு எண்ணிக்கைகளின் அடிப்படையிலும் பொருட்கள் வழங்கப்படுவது கிடையாது. இதனால் பொதுமக்களுக்கும், ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு சரியான எடையில், ரே‌ஷன் கார்டுகளுக்கு ஏற்ப அத்தியாவசிய பொருட்களை கடைகளுக்கு வழங்க வேண்டும்.

    ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பொது வினியோக திட்டத்திற்கு என தமிழக அரசு தனித்துறை உருவாக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9-ந் தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் கடையடைப்பு மற்றும் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும். எனவே 9-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகளும் மூடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rationshopstrike

    ×