search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Publishing"

  • குடும்பத்துடன் இத்தாலியின் அமல்ஃபி கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தார்
  • இந்த மோதலில் ஏட்ரியன் படகிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டார்

  ப்ளூம்ஸ்பரி பப்ளிஷிங் என்பது இங்கிலாந்தின் கேம்டன் பகுதியை மையமாக கொண்டு செயல்படும் ஒரு உலகளாவிய பதிப்பக நிறுவனம்.

  இந்நிறுவனம் கதை மற்றும் கதை அல்லாத புத்தகங்களை பதிப்பிட்டு வெளியிடுவதில் உலக புகழ் பெற்றதாகும். இந்நிறுவனத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகளில் பதிப்பக கிளைகள் உண்டு.

  இதன் ஒரு பதிப்பக அலுவலகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கிறது.

  அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை நிர்வகித்து வந்தவர் இதன் தலைமை நிர்வாக அதிகாரி ஏட்ரியன் வாகன் எனும் 45 வயது பெண்மணி.

  இவர் இத்தாலியின் அமல்ஃபி கடற்கரையில் தனது கணவர், 12 மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகளுடன் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு அவர் குடும்பத்தினருடன் ஒரு வாடகை வேகப்படகில் கடலில் பயணித்தார்.

  அப்போது சற்று தொலைவில் ஒரு பெரிய படகு சுமார் 80 சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

  திடீரென ஏட்ரியன் சென்ற படகு கட்டுப்பாட்டை இழந்து அந்த பெரிய படகின் மீது மோதியது.

  இதில் ஏட்ரியன் படகிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டார். அப்போது பெரிய படகின் புரொபெல்லர் மீது மோதி அவர் படுகாயமடைந்தார்.

  உடனடியாக கடலிலிருந்து அவர் மீட்கப்பட்டார். அவசரகால சிகிச்சை குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அவர்கள் வந்து பரிசோதித்து பார்த்த போது ஏட்ரியன் உயிரிழந்திருந்தார்.

  இந்த மோதலில் ஏட்ரியனின் கணவர் மைக் வைட்டிற்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தைகளுக்கு காயங்கள் ஏதுமில்லை என்றாலும் இந்த கோர விபத்தை நேரில் கண்டதால் அவர்கள் இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

  இத்தாலியின் புலனாய்வு துறையினர் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

  ஏட்ரியன் உயிரிழப்பிற்கு ப்ளூம்ஸ்பரி பதிப்பகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

  • ஒரு லட்சம் பார்வையாளர்கள் மற்றும் 50 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் என்பது விற்பனை இலக்காகும்.
  • பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு வந்து புத்தகத் திருவிழாவினை பார்வையிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  மன்னார்குடி:

  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 2-வது புத்தக திருவிழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது.

  மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புத்தக திருவிழா நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர்.ஜெ.ஜெயரஞ்சன் கண்காட்சி தொடங்கி வைக்கிறார்.

  ஒரு லட்சம் பார்வையாளர்கள் மற்றும் 50 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் என்பது விற்பனை இலக்காகும்.

  முதல் விற்பனையை டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ தொடங்கி வைக்க, மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் சேதுராமன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் நூல்களை வாங்கி விற்பனையை ஆரம்பிக்கின்றனர். 45 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டின் அனைத்து முன்னணி பதிப்பகங்களும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

  நாளை மாலை 6 மணிக்கு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மன்னார்குடி நகர்ம ன்றத்தலைவர் சோழராஜன், துணைத் தலைவர் கைலாசம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்களின் அறம் கிளை சார்பாக "கீழடி நம் தாய்மடி" என்ற கண்காட்சி தொடங்கி வைக்கப்படுகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலாளர் எஸ். சுப்பிரமணி, மாவட்ட நூலக அலுவலர் ஆர்.ஆண்டாள், முதன்மைக் கல்வி அலுவலர் ஆ. தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

  அன்றையதினம் மாலை 3 மணிக்கு புத்தகத் திருவிழா முன்னோட்டமாக மன்னார்குடி புதிய பஸ் நிலையத்திலிருந்து மாட்டு வண்டி நூலகம், நூலகர்.எஸ்.வி.கனகசபை பிள்ளை நினைவாக தொடங்கப்பட்டு தேசிய மேல்நிலைப் பள்ளியில் முடிவடைகிறது. மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கே.கே.பாலச்சந்தர் பேரணியை தொடக்கி வைக்கிறார்.

  வருகிற 22 முதல் 26 வரை உள்ள பள்ளி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற நாட்களில் எல்லா நேரங்களிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம்.

  மன்னார்குடி மாவட்டக் கல்வி அலுவலரால் ஒரே நேரத்தில் மாணவர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க எந்தெந்த வட்டார பள்ளிகளின் மாணவர்கள் எந்தெந்த நாளில் பங்கேற்க வேண்டும் என்கிற கால அட்டவணை தயாரிக்கப்பட்டு சுற்றறிக்கையாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்படுகிறது.பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு வந்து புத்தகத் திருவிழாவினை பார்வையிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  புத்தக கண்காட்சி காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடைபெறும். தினசரி மாலை அரங்கத்தின் வாயிலில் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை பிரபல பேச்சாளர்கள் சிந்தனையாளர்களின் உரை வீச்சு நடைபெறுகிறது.

  பங்கேற்கும் பேச்சாளர்கள் விபரம் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ்,கஜேந்திர பாபு, தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகைச் செல்வன், யூ டியூபர் மதன் கௌரி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, எழுத்தாளர் செல்வ. புவியரசன், கவிஞர். களப்பிரன், எழுத்தாளர் ஆசை, திரைப்பட வசனகர்த்தா பாஸ்கர்.

  சக்தி, சித்த மருத்துவர் கு. சிவராமன், குன்றக்குடி. பொன்னம்பல அடிகளார், முன்னாள் அமைச்சர்கள் இரா. காமராஜ், வைகைச் செல்வன், கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், ஜெய் பீம் திரைப்பட இயக்குனர் தி.செ.ஞானவேல், எழுத்தாளர் சமஸ் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

  மேலும் சிறப்பு விருந்தினர்களாக விஜய் டிவி சூப்பர் சிங்கர் மன்னை அனு, என்ஜாய் எஞ்ஞாமி பாடல் புகழ் தெருக்குரல் அறிவு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

  மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர்களால் எளிய முறை அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா தந்திரமா, போன்ற செயல்பாடுகள் அரங்கத்தில் ஒவ்வொரு நாளும் நடைபெறும். மன்னார்குடி நகராட்சி, போக்குவரத்து காவல்துறை, மன்னார்குடி பள்ளி கல்வித்துறை ஆகியோர் ஒத்துழைப்புடன் விழா குழு அடிப்படை வசதிக்கான கழிவறை, குடிநீர், போக்குவரத்து நெறிப்படுத்தும் பணி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.

  குழந்தைகளை அழைத்து வந்து குடும்பமாக பங்கேற்று பயன்பெற தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளைத்தலைவர் எஸ். அன்பரசு, செயலாளர் ஐ. இம்மானுவேல் மாவட்டத் தலைவர் யு.எஸ்.பொன்முடி, துணைத்தலைவர் ப.ரமேஷ் மற்றும் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் டி.ரெங்கையன்.

  2nd book festival in Mannargudi starts tomorrowமன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி.பாலகிரு–ஷ்ணன் ஆகியோர் சார்பாக இத்தகவலை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் இரா. ஏசுதாஸ் தெரிவித்தார்.

  ×