search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PH Pandian"

    ஓ.பன்னீர்செல்வம், யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக சென்று டி.டி.வி.தினகரனை சந்திக்கிறார் என்றால் அவரது நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டதாக கே.சி.பழனிசாமி கூறினார். #ADMK #OPanneerSelvam KCPalanisamy
    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம்- டி.டி.வி. தினகரனை ரகசியமாக சந்தித்தது பற்றி முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதால் தான் அவரது பின்னால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டனர்.

    அன்றைக்கு சசிகலாவை எதிர்த்ததில் முக்கிய தளகர்த்தாவாக விளங்கியவர்கள் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன், பொன்னையன், நத்தம் விசுவநாதன் மற்றும் நானும் ஒருவன்.

    ஆனால் இதில் யாரிடமும் தகவல் சொல்லாமல் ரகசியமாக சென்று டி.டி.வி. தினகரனை ஓ.பன்னீர் செல்வம் பார்த்திருக்கிறார் என்றால் இவர் பின்னால் நின்ற எங்களையும் அ.தி.மு.க. தொண்டர்களையும் முட்டாள் ஆக்கி விட்டார்.

    அரசியலில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் முதலில் நல்ல மனு‌ஷனாக, உண்மையாக, நம்பகத்தன்மை உள்ளவராக நடந்து கொள்ள வேண்டும்.

    இவர் ஏன் ரகசியமாக சென்று சந்திக்க வேண்டும். டி.டி.வி. தினகரன் அவரது ஆதரவாளர்களிடம் சொல்லி விட்டு தான் சந்திக்க வந்துள்ளார்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி உள்பட யாரிடமும் சொல்லாமல் அவர் மட்டும் ரகசியமாக சென்று சந்திக்கிறார் என்றால் அவரது நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டது.

    இதில் இன்னும் பல கேள்விகளுக்கு ஓ.பன்னீர் செல்வம் விடை சொல்லாமல் உள்ளார்.

    1. தினகரனை சந்தித்து பேசிய போது என்னென்ன பேசினார்கள் என்ற விவரத்தை முழுமையாக சொல்லவில்லை.

    2. கோட்டூர்புரத்தில் யாருடைய வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது?


    3. சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது இவருக்கும் நண்பர். அவருக்கும் நண்பர் என்கிறார்கள். அப்படியானால் அவர் தொழில் அதிபரா? அரசியல்வாதியா? அவரைப் பற்றிய விவரங்களை ஏன் சொல்ல மறுக்கிறார்கள்.

    4. கடந்த வாரம் தினகரனை மீண்டும் சந்திக்க முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை.

    இதையெல்லாம் பார்க்கும் போது தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. தொண்டர்களை குழப்பி முட்டாள் ஆக்குகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் - டி.டி.வி. தினகரன் என்ற அளவில் அரசியல் களத்தை அமைப்பதற்காக இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு நாடகமாடி கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #OPanneerSelvam KCPalanisamy
    அ.தி.மு.க. சட்ட ஆலோசகராக பி.எச்.பாண்டியன் நியமிக்கப்பட்டு உள்ளதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PHPandian #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    அ.தி.மு.க.வின் சட்ட ஆலோசகராக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், கட்சியின் அமைப்பு செயலாளர்களாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ஏ.பாப்பாசுந்தரம், மதுரை புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ம.முத்துராமலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளராக காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க.வின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ள பி.எச்.பாண்டியன் 1945-ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் பிறந்தார். சட்ட படிப்பில் முதுகலை பட்டம் (எம்.எல்.) முடித்து, முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். மிகுந்த சட்ட ஞானம் மிக்கவர். சட்டப்படிப்பை முடித்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் பணியில் 50 ஆண்டுகளை கடந்திருக்கிறார். எம்.எல்.ஏ., எம்.பி., சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்திருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அன்புக்கு பாத்திரப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. #PHPandian #ADMK

    ×