என் மலர்
நீங்கள் தேடியது "P chidamaram"
- காங்கிரசின் கோரிக்கையை ஏற்க தி.மு.க. தலைமை மறுத்துவிட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு.
- ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளை ஒவ்வொன்றாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தி.மு.க. - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளை கேட்டதாகவும், தி.மு.க. தரப்பில் 23 தொகுதிகளை வழங்குகிறோம் என சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின.
காங்கிரஸ் கட்சி கேட்கும் சீட் எண்ணிக்கையை குறைக்காமல் பிடிவாதமாக இருப்பதால் எந்த முடிவுக்கும் தயார் நிலையில் மு.க.ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை காங்கிரஸ் எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரசின் கோரிக்கையை ஏற்க தி.மு.க. தலைமை மறுத்துவிட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு என தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணியை தக்கவைக்க கடைசி வாய்ப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சந்திக்க உள்ளார். தி.மு.க.வுடன் கூட்டணி தொடர வேண்டும் என்பதில் ப.சிதம்பரம் உறுதியாக இருக்கிறார். கூட்டணி முறிவை தவிர்க்க ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் ப.சிதம்பரத்தின் இல்லத்தில் அவரை சந்தித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனை நடத்தி வருகிறார்.
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இருவரும் அவசர ஆலோசனை நடத்தினர்.
- தினசரி குறைந்த பட்ச ஊதியம் 400 ரூபாய் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- மார்ச் மாதம் வரையில் கட்டப்படாத கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும்.
மோடி தலைமையிலான மத்திய அரசு 3-வது முறையாக அமைந்த நிலையில் நாடாளுமன்றத்தில் முதலாவது மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இருந்து பெரும்பாலானவற்றை காப்பி அடித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்திருந்தது. மேலும் பட்ஜெட்டில் பல மாநிலங்கள் பெயர் குறிப்பிடப்படவில்லை எனவும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் பதவி நாற்காலியை பாதுகாப்பதற்கான பட்ஜெட் (ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததை சுட்டிக்காட்டி) எனவும் விமர்சித்திருந்தது.
இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தார்.
மாநிலங்களவையில் இன்று பேசும்போது ப.சிதம்பரம் கூறியதாவது:-
தினசரி குறைந்த பட்ச ஊதியம் 400 ரூபாய் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான எம்.எஸ்.பி.-க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் அல்லது குறைந்த பட்ச ஆதார விலை கொடுக்க வேண்டும்.
மார்ச் மாதம் வரையில் கட்டப்படாத கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும்.
ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
நீட் தேர்வு முறை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை உரிமையை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
மேலும், தயவு செய்து இன்னும் கொஞ்சம் காப்பி அடிக்கவும் என கிண்டல் செய்தார்.
அத்துடன் வேலையாப்பின்மை மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம், 2024 ஜூனில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 9.2 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.






