என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nan mudhalvan scheme"

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • ஆண்டுதோறும் 100 அரசு ஊழியர்களை உருவாக்கும் இலக்குடன் நான் முதல்வன் திட்டம்.

    நான் முதல்வன் திட்டத்தில் பயன்றி மாணவர்கள் 87 பேர் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆண்டுதோறும் 100 அரசு ஊழியர்களை உருவாக்கும் இலக்குடன் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த முறை தேர்ச்சி பெற இயலாதவர்கள் சோர்ந்து போகாதீர்கள்.
    • எட்டி விடும் தொலைவில் இருக்கும் வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடுங்கள்.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வெற்றியாளர்களை நேரில் அழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டினார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான்_முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்று 2024-ஆம் ஆண்டு IFoS பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பாராட்டினேன்.

    UPSC குடிமைப் பணித் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் இருந்து தயாராகும் மாணவர்களுக்கு மிகப் பெரும் ஊக்கமாக

    நான் முதல்வன் திட்டம் அமைந்துள்ளதை அவர்களுடனான கலந்துரையாடலில் உணர முடிந்தது.

    கடந்த முறை தேர்ச்சி பெற இயலாதவர்கள் சோர்ந்து போகாதீர்கள், இந்த ஆண்டு இன்னும் சிறப்பாகத் தயாராகி, எட்டி விடும் தொலைவில் இருக்கும் வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லண்டனில் பெற்ற அனுபவங்களை முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர்.
    • சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் உள்ள Durham பல்கலைக்கழகத்தில் ஒருவார பயிற்சி முடித்துவிட்டு சென்னை திரும்பிய மாணவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    லண்டனில் பெற்ற அனுபவங்களை முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இந்த சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவுத்திட்டம் மட்டுமல்ல; நான் விரும்பும் மாணவச் செல்வங்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்!

    இந்தத் திட்டத்தின்கீழ் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று பயிற்சி முடித்து திரும்பிய 25 மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, அவர்களது கண்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சியையும் உள்ளங்களில் நிறைந்திருந்த நம்பிக்கையையும் கண்டேன். அவர்களது நம்பிக்கைதான் நாளைய நம் புகழுக்கான அச்சாணி!

    நாடும் நாமும் பெருமையடையக் கற்போம்!

    கல்வியைவிடச் சிறந்த செல்வம் ஏதுமில்லை எனக் கற்பிப்போம்!

    கல்வியே பெருந்துணை எனத் தடைகளை உடைத்து வெற்றிநடை போடுவோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×