search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LokSabhaElections2019"

    மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
    மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.

    இன்று வாக்குகள் எண்ணியதும் தொடக்கத்தில் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலையை பெற்றுள்ளார்.
    ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். #NirmalaSitharaman #LokSabhaElections2019 #Wayanad #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி எம்.பி.யாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி வகித்து வருகிறார். இந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடும் அவர் கேரள மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் வற்புறுத்தலுக்கிணங்க அங்குள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

    வயநாடு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி நிறுத்தப்பட்டுள்ளார்.

    அங்கு தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளார் துஷார் வெள்ளப்பள்ளியை ஆதரித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    சுல்தான் பத்தேரி நகரச் சாலைகளில் வாகனத்தில் சென்று அவர் மக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். #NirmalaSitharaman #LokSabhaElections2019 #Wayanad #RahulGandhi
    தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் விஜய்யின் புகைப்படம் மற்றும் கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. #Vijay
    நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை அவரது ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள். 2004-ல் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்க அமைப்பாக மாற்றிய விஜய் அதன் மூலம் தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்தார்.

    ஒரு அரசியல் கட்சிக்கு இணையாக விஜய் மக்கள் இயக்கத்துக்கு மாவட்ட, நகர, ஒன்றிய அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை உருவாக்கி அவற்றுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதன் மூலம் விஜய் மக்கள் இயக்கம் வலுவான அமைப்பாக மாறி இருக்கிறது.



    நடிகர் கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்கி தேர்தலில் குதித்துள்ளார். ரஜினிகாந்த் நதிநீர் இணைப்பை செயல்படுத்தும் கட்சிக்கு ஓட்டுபோடுமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். நடிகர் விஜய் ஆதரவு யாருக்கு? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவியது.

    இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தனது படம் மற்றும் மக்கள் இயக்க கொடியை ரசிகர்கள் பயன்படுத்த கூடாது என்றும், பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து கொள்ளலாம் என்றும் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்மன்ற நிர்வாகிகள் மூலம் இந்த தகவல் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    தென் சென்னை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாக்கு சேகரித்தார். #PChidambaram #LokSabhaElections2019

    சென்னை:

    தென் சென்னை பாராளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சைதாப்பேட்டை குயவர் வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

    ’’இந்த தொகுதியில் பேசுவது இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த தொகுதியில் தமிழ் நிற்கிறது. இந்த தொகுதியில் நிற்பது தனி பெண்மணி அல்ல. தமிழ் அறிவு நிற்கிறது, தமிழ் ஆராய்ச்சியாளர் நிற்கிறார். இங்கே இந்த கூட்டணி வேட்பாளர் வெற்றிபெறுவது மாத்திரமல்ல, தமிழே வெற்றி பெறுகிறது. அவரை வெற்றிப் பெற செய்வது தமிழர்களின் கடமை.

    இக்கூட்டணி புதிய கூட்டணி அல்ல, 1971ம் ஆண்டு கலைஞரும், இந்திரா காந்தியும் இந்த கூட்டணியை முதன்முதலாக அமைத்தார்கள். இந்த கூட்டணி பாராளுமன்றத் தேர்தலுக்காக 5முறை அமைந்தது. ஐந்து முறை கூட்டணி அமைந்த போதும் கலைஞர் நம்மோடு இருந்தார். ஐந்து முறையும் இந்த கூட்டணி வெற்றி பெற்றது. இதுவரை இந்த கூட்டணி தோற்றதில்லை, வருகின்ற 2019 தேர்தலிலும் உங்களுடைய ஆதரவோடு வெற்றி பெறும்.

    இக்கூட்டணியை வெற்றிச் செய்வது கலைஞருக்கு செய்யும் மரியாதையாகும். இதை மனதில் வைத்து தமிழச்சி தங்கபாண்டியனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தி.மு. மாவட்ட செயலாளர் மா.சுப்ரமணியம் எம்.எல்.ஏ, தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சைதை மேற்கு பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மகேஷ்குமார், குணசேகர், சைதை அன்பரசன், ஸ்ரீதரன், காங்கிரஸ் கட்சி சார்பில் தாமோதரன், கராத்தே தியாகராஜன் , தி.நகர் ஸ்ரீராம், சைதை முத்தமிழ், கோபிநாத்,திருவான்மியூர் சாந்தி,மலர்கொடி, சுசிலா கோபாலகிருஷ்ணன், மதிமுக சுப்ரமனியம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்ண்டர்கள் கலந்துகொண்டனர். #PChidambaram #LokSabhaElections2019

    நாக்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி நிதின் கட்கரி, தனக்கு காங்கிரஸ் கட்சியினரின் ஆதரவும் இருப்பதாக கூறியுள்ளார். #Loksabhaelections2019 #Nitingadkari #BJP
    நாக்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் மற்றும் நீர்வள ஆதாரங்கள் மற்றும் கங்கை தூய்மைபடுத்துதல் துறைகளின் மந்திரியான நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    நேற்று நாக்பூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கட்கரி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

    நான் சாதி, மதம், மொழி, மற்றும் எந்த கட்சியினைச் சார்ந்தவர் என பாராமல் அனைத்து மக்களையும் சமமாக கருதி பணியாற்றி உள்ளேன். இதன் விளைவாக காங்கிரசின் ஆதரவாளர்களும், அலுவலகங்களில் பணியாற்றும் பலரும் எனக்கு போன் செய்து, நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். நாங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பணியாற்றலாம். ஆனால் எங்கள் இதயம் உங்களின் சேவை குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கும் என கூறுகின்றனர். இதனால் எனக்கு எல்லா இடங்களிலும் ஆதரவு இருப்பது  உறுதியாக தெரிகிறது.



    மேலும் பாஜகவினர் மக்களிடம் சென்று நம்பிக்கையுடனும், பணிவுடனும் வாக்குகளை சேகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் நம்பிக்கைக்கும், அத்துமீறிய செயல்களுக்கும் இடையே உள்ள வேற்றுமையை அறிய வேண்டும். மக்களிடையே கனிவான முறையில் நம் ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்குகளை பெற வேண்டுமே தவிர, கடுமையாக நடந்துக் கொள்ளக் கூடாது.

    நான் மக்களிடம் சென்று, பிற கட்சியினரின் பெயர்களை  கூறி, அவதூறு பேசி வாக்கு சேகரிக்க விரும்பவில்லை. என்னால் என்னென்ன சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதோ, அதை மட்டுமே கூறி பிரசாரம் மேற்கொள்வேன். கடந்த தேர்தலில் என்ன வாக்குறுதிகள் கொடுத்தோமோ அதனை நிறைவேற்றியுள்ளோம். நாங்கள் சொல்வதை தான் செய்வோம்.

    மக்கள் திறமையானவர்கள், அவர்களுக்கு எல்லாம் தெரியும். மக்களுக்கான பணிகளை செய்து அவர்களின் இதயங்களை வென்றுள்ளோம். இந்த முறையும் பாஜக வெற்றி பெறும் என்பது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Loksabhaelections2019 #Nitingadkari #BJP #Congress



    ×