search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kovai man"

    • ரூ. 3 லட்சத்தை ராஜேஷ் பிரித்வியிடம் கொடுத்ததார்.
    • ராஜேஷ் பிரித்வி வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    கோவை,

    கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 46).

    இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த ராஜேஷ் பிரித்வி (35) என்பவர் அறிமுகமானார். அவர் சுப்பிரமணியிடம் கோவையில் பிரபல கல்லூரியில் சீட் வாங்கி தருகிறேன். யாருக்காவது சீட் வேண்டும் என்றால் சொல்லுங்கள் என கூறினார்.

    இதனை நம்பிய சுப்பிரமணி தனது மகனை கல்லூரியில் சேர்க்க வேண்டும் என கூறினார். அதற்கு ராஜேஷ் பிரித்வி கல்லூரியில் சீட் வாங்குவதற்கு பணம் செலவாகும் .

    அதற்கு ரூ. 3 லட்சம் வேண்டும் என கூறினார். இதனையடுத்து சுப்பிரமணி தனது மகனின் சீட்டிற்காக ரூ.3 லட்சத்தை ராஜேஷ் பிரித்வியிடம் கொடுத்ததார். ஆனால் பணத்தை பெற்ற பின்னர் கல்லூரியில் சீட் வாங்கி கொடுக்கவில்லை. மேலும் ராஜேஷ் பிரித்வி வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுப்பிரமணி இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் கல்லூரில் சீட் வாங்கித்தருவதாக கூறி ரூ.3 லட்சம் பணத்ஏதை பெற்று ஏமாற்றிய ராஜேஷ் பிரித்வி மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொது இடங்கள் மற்றும் கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு இந்து அமைப்பினரும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
    • விதிமுறைகளை மீறி கூடுதல் சிலைகளை வைக்க கூடாது என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    கோவை 

    கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு தொடர்பாக இன்று இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் வரும் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்கள் மற்றும் கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு இந்து அமைப்பினரும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். விசர்ஜன ஊர்வலத்தின்போது எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்காதவாறு செல்ல வேண்டும். விதிமுறைகளை மீறி கூடுதல் சிலைகளை வைக்க கூடாது என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

    கோவை ஆவாரம் பாளையத்தில் கடன் நெருக்கடி காரணமாக பெற்றோரை கத்தியால் குத்திக்கொன்று மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kovai
    கோவை:

    கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் பாலமுருகன் - லட்சுமி தம்பதி. இவரது மகன் வைரமுத்து  கடன் நெருக்கடியால் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால், தனது பெற்றோரை கத்தியால் குத்திக்கொன்ற வைரமுத்து, பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், வைரமுத்து எழுதிய தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
    ×