என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kolkata Knigh riders"

    • ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • கொல்கத்தா அணிக்காக 198 போட்டிகளில் நரைன் விளையாடியுள்ளார்.

    ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 3 ஆவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்தார்.

    கொல்கத்தா அணிக்காக 198 போட்டிகளில் விளையாடியுள்ள நரைன் 210 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    இதற்கு முன்பு நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக இங்கிலாந்தின் சமித் படேல் 208 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

    டி20 கிரிக்கெட்டில்ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்

    1. சுனில் நரைன் - 210* (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

    2. சமித் படேல் - 208 (நாட்டிங்ஹாம்ஷையர்)

    3. கிறிஸ் உட் - 199 (ஹாம்ப்ஷயர்)

    4. லசித் மலிங்கா - 196 (மும்பை இந்தியன்ஸ்)

    5. டேவிட் பெய்ன் - 193 (க்ளௌசெஸ்டர்ஷையர்)

    • ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோதின.
    • பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசண்டிகர்:

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 111 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா 95 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கொல்கத்தாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யசுவேந்திர சாஹல். அவர் 4 ஓவர் வீசி 28 ரன் கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார்.

    ஐ.பி.எல். வரலாற்றில் சாஹல் 8-வது முறையாக 4 விக்கெட்டை தொட்டுள்ளார். இதன் மூலம் அவர் சுனில் நரைன் சாதனையை சமன் செய்தார். சுனில் நரைன் 8 தடவை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.

    அதற்கு அடுத்தப்படியாக மலிங்கா 7 தடவையும், ரபடா 6 முறையும் 4 விக்கெட் எடுத்துள்ளார்கள்.

    இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரைன் 2 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றியவர் என்ற சாதனையை புரிந்தார். அவர் பஞ்சாப்புக்கு எதிராக 36 விக்கெட் சாய்த்தார். இதற்கு முன்பு உமேஷ் யாதவ் 35 விக்கெட் (பஞ்சாப்புக்கு எதிராக) வீழ்த்தி இருந்தார்.

    ஐபிஎல் 11-வது சீசனின் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறிய நான்கு அணிகளுக்கும் இடையில் சுவாரஸ்யமான தகவல் புதைந்துள்ளது. #IPL2018
    ஐபிஎல் 11-வது சீசனின் லீக் ஆட்டங்கள் நேற்றோடு முடிவடைந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 9 ஆட்டங்களில் வெற்றி பெற்று முதல் இடத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் 9 வெற்றிகள் பெற்று 2-வது இடத்தையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 வெற்றிகள் பெற்று 3-வது இடத்தையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 7 வெற்றிகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்தது.

    கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் தோல்வியடைந்து வெளியேறின.



    பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறிய நான்கு அணிகளுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இந்த நான்கு அணிகளும் ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணிகளாகும். சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2016-ல் சாம்பியன் பட்டம் வென்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அறிமுக தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.



    சென்னை சூப்பர் கிங்ஸ் 2010 மற்றும் 2011-ம் ஆண்டும் அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2012-ம் ஆண்டும், 2014-ம் ஆண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.



    தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவும், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
    ×