என் மலர்
நீங்கள் தேடியது "Humanity"
- காசா அமைதித் திட்டத்தின் மூலம் அமைதிக்கான பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
- அமைதிக்கான பாதை எப்போதும் எளிதானது அல்ல.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பின்பேரில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். இந்நிலையில் பயணத்தின் இரண்டாவது நாளான இன்று இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி,
"இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது: மனிதகுலம் ஒருபோதும் மோதலுக்கு பலியாகக்கூடாது. காசா அமைதித் திட்டத்தின் மூலம் அமைதிக்கான பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளை இந்தியா முழுமையாக ஆதரித்துள்ளது. எதிர்காலத்திலும், அனைத்து நாடுகளுடனும் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பைத் தொடர்வோம்" என தெரிவித்தார்.
அதே நேரத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலையும் கண்டித்தார். நேற்று இஸ்ரேல் நாடாளுமன்றமான 'நெசெட்'-இல் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமரான மோடி,
"ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட காசா அமைதி முயற்சி ஒரு பாதையை வழங்குகிறது. இந்த முயற்சிக்கு இந்தியா தனது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. பாலஸ்தீன பிரச்சினையை நிவர்த்தி செய்வது உட்பட, பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்கும் ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்கான வாக்குறுதியை அது கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.
நமது அனைத்து முயற்சிகளும் ஞானம், தைரியம் மற்றும் மனிதநேயத்தால் வழிநடத்தப்படட்டும். அமைதிக்கான பாதை எப்போதும் எளிதானது அல்ல. ஆனால் இந்த பிராந்தியத்தில் உரையாடல், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இந்தியா உங்களுடனும் உலகத்துடனும் இணைகிறது" எனப் பேசினார்.
- தாயன்பிற்கு ஈடாக அன்பு காட்டி மனிதநேயத்தை வளர்த்து அதன்வழி ஆக்கப்பூர்வமான காரியங்களை செயல்படுத்த வேண்டும்.
- பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஜோதி அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகரத்திற்குட்பட்ட ஏழை, எளிய அன்றாட கூலி தொழில் செய்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையிலும், வருமானம் இல்லாமல் முடங்கி கிடக்கும் மக்களுக்கு உதவி செய்யும் வகையிலும் தேர்வு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு ஜோதி அறக்கட்டளை சார்பில் விலையில்லா அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஜோதி அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:- மனிதனிடம் இருக்கும் பல்வேறு ஆக்கப்பூர்வான எண்ணங்கள் சொல் வடிவம் பெறாமல் போவதற்கு அவர்களுக்கு அன்பும், ஆதரவும், அரவணைப்பும் கிடைக்காமல் போனதே காரணம். இந்த நிலை இருக்க கூடாது.
தாயன்பிற்கு ஈடாக அன்பு காட்டி மனிதநேயத்தை வளர்த்து அதன்வழி ஆக்கப்பூர்வமான காரியங்களை செயல்படுத்த வேண்டும் என்றார். மேலும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோர் மற்றும் முதியோர் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஜோதி அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர். பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.
- துபாயில் மனித நேயத்திற்கான கோல்டன் விசா பெற்ற முதல் தமிழருக்கு பாராட்டு குவிகிறது.
- ஐக்கிய அரபு அமீரக அரசின் மனிதநேய முன்னோடி என்ற விசாவை பெறும் முதல் தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழக்கரை
ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 வருடத்திற்கான உயரிய கோல்டன் விசா தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா காலகட்டம் மற்றும் பல்வேறு சமயங்களில் சமூக சேவைகளில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் வகையில் ஹுமானிடேரியன் பயனிர் என்ற கோல்டன் விசா அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது.
மனிதநேயத்திற்கான இந்த விசாவை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த துபாய் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசினுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கி உள்ளது. ஐக்கிய அரபு அமீரக அரசின் மனிதநேய முன்னோடி என்ற விசாவை பெறும் முதல் தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான விசா வழங்குவதற்கான நிகழ்ச்சி அன்வர் கன்சல்டன்சி நிறுவனத்தில் நடந்தது. இதில் அமீரக பிரமுகர் அலி செய்யது புத்தாவில் அல் மத்துருசி, அன்வர் குழுமம் அப்துல் காதர், டாம் சர்வீஸ் ஷானவாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கோல்டன் விசா பெற்று கீழக்கரை நகருக்கு பெருமை சேர்த்த ஹமீது யாசினுக்கு தென்னிந்திய முஸ்லிம் கல்வி சங்கம் செயற்குழு உறுப்பினரும், இஸ்லாமியாகல்வி நிறுவனங்களின் தாளாளருமான எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம், தெற்கு தெரு ஜமாத் தலைவர் உமர் களஞ்சியம், அனைத்து ஜமாத் கூட்டமைப்பு செயலாளர் சேக் ஹுசைன், கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் பொறியாளர் கபீர், கீழக்கரை நகர்மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், துபாய் தொழிலதிபர்கள் முகமது ஜலாலுதீன், பைரோஸ் அலிக்கான், கீழக்கரை முன்னாள் கவுன்சிலர் வேலுச்சாமி, கீழக்கரை தி.மு.க, நகர செயலாளர் பஷீர் அகமது, மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார், நகர் மன்ற கவுன்சிலர்கள் எம்.எம்.கே காசிம், முகம்மது சுகைபு சமூக ஆர்வலர் வழக்கறிஞர் சாலிஹ் ஹுசைன் உள்பட நூற்றுக்கணக்கான அரசியல் கட்சி பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும், அனைத்து சமுதாய நிர்வாகிகளும், தொழில் அதிபர்களும் மொபைல் மற்றும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.






