என் மலர்
நீங்கள் தேடியது "Gaza Peace initiative"
- காசா அமைதித் திட்டத்தின் மூலம் அமைதிக்கான பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
- அமைதிக்கான பாதை எப்போதும் எளிதானது அல்ல.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பின்பேரில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். இந்நிலையில் பயணத்தின் இரண்டாவது நாளான இன்று இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி,
"இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது: மனிதகுலம் ஒருபோதும் மோதலுக்கு பலியாகக்கூடாது. காசா அமைதித் திட்டத்தின் மூலம் அமைதிக்கான பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளை இந்தியா முழுமையாக ஆதரித்துள்ளது. எதிர்காலத்திலும், அனைத்து நாடுகளுடனும் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பைத் தொடர்வோம்" என தெரிவித்தார்.
அதே நேரத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலையும் கண்டித்தார். நேற்று இஸ்ரேல் நாடாளுமன்றமான 'நெசெட்'-இல் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமரான மோடி,
"ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட காசா அமைதி முயற்சி ஒரு பாதையை வழங்குகிறது. இந்த முயற்சிக்கு இந்தியா தனது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. பாலஸ்தீன பிரச்சினையை நிவர்த்தி செய்வது உட்பட, பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்கும் ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்கான வாக்குறுதியை அது கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.
நமது அனைத்து முயற்சிகளும் ஞானம், தைரியம் மற்றும் மனிதநேயத்தால் வழிநடத்தப்படட்டும். அமைதிக்கான பாதை எப்போதும் எளிதானது அல்ல. ஆனால் இந்த பிராந்தியத்தில் உரையாடல், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இந்தியா உங்களுடனும் உலகத்துடனும் இணைகிறது" எனப் பேசினார்.






