search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hareesh Peradi"

    எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் - மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. #KombuVatchaSingamda
    ‘குற்றம் 23’, ‘தடம்’ படங்களை தொடர்ந்து ரெதான் சினிமாஸ் சார்பில் இந்தர்குமார் தயாரிப்பில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. 

    ‘சுந்தரபாண்டியன்’ வெற்றியை தொடர்ந்து எஸ்.ஆர்.பிரபாகரன் - சசிகுமார் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது.



    இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஹரீஷ் பெரடி, துளசி, தீபா ராமனுஜம், செண்ராயன் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மறைந்த இயக்குநர் மகேந்திரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    1990-1994 கால கட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த, பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 


    ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள செய்துள்ள இந்த படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். டான் பாஸ்கோ படத்தொகுப்பையும், அன்பறிவ் ஸ்டன்ட் காட்சிகளையும் கவனிக்கின்றனர். #KombuVatchaSingamda #Sasikumar #MadonnaSebastian

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் விமர்சனம். #Sandakozhi2Review #Vishal #Varalakshmi
    தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பல ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் தடைப்பட்டுள்ளது. எப்படியாவது இந்த ஆண்டு திருவிழாவை நடத்தியாக வேண்டும் என்று ஊர்த்தலைவரான ராஜ்கிரன் முடிவு செய்கிறார்.

    7 வருட பகையை தீர்த்துக் கொள்ள விரும்பும் வரலட்சுமியின் குடும்பம், ராஜ்கிரன் பாதுகாப்பில் வளரும் ஜானி ஹரியை திருவிழாவில் வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறது. இந்த நிலையில் 7 வருடமாக ஊரில் இல்லாத நாயகன் விஷால் ஊர் திருவிழாவுக்காக கம்பம் வருகிறார். அங்கு போலீசாக வேண்டும் என்று முயற்சி செய்து வரும் கீர்த்தி சுரேஷுக்கும், விஷாலுக்கும் காதல் வருகிறது.



    கடைசியில், திருவிழாவில் நல்ல படியாக நடந்ததா? வரலட்சுமியின் குடும்ப பகை தீர்ந்ததா? விஷால் - கீர்த்தி சுரேஷ் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    விஷால் தனது வழக்கமான அதிரடியுடன் பஞ்ச் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் தனக்கே உரிய ஸ்டைலில் பட்டையை கிளப்புகிறார். காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மாறுபட்ட குறும்புத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.



    வரலட்சுமிக்கு அழுத்தமான கதாபாத்திரம், வில்லியாக வித்தியாசமான தோற்றத்தில் வந்து பாராட்டை பெறுகிறார். படத்தின் ஓட்டத்திற்கு, படத்தின் தூணாக நிற்கிறார் ராஜ்கிரன். அவரது கதாபாத்திரமே படத்திற்கு பெரிய பலம். சூரி, முனிஸ்காந்த், கஞ்சா கருப்பு காமெடிக்கு துணை நிற்கின்றனர். மற்றபடி அர்ஜய், ஹரிஷ் பேரடி, அப்பானி சரத், சண்முக ராஜன், தென்னவன் துரைசாமி, விஸ்வந்த் என மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்துக்கு பெரிதும் உதவுகின்றனர்.

    சண்டக்கோழி இரண்டாவது பாகத்தையும் பழிவாங்கல் கதையை மையப்படுத்தியே உருவாக்கி இருக்கிறார் லிங்குசாமி. இருப்பினும் முதல் பாகத்தை போலவே இதிலும் குடும்பம், காதல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தையும் தனது பாணியில் கலந்து கொடுத்திருக்கிறார்.



    யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம். பாடல்களும் கேட்கும் ரகமாகவே உள்ளது. கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக நகர்கிறது.

    மொத்தத்தில் `சண்டக்கோழி 2' சீற்றம். #Sandakozhi2Review #Vishal #Varalakshmi

    ×