என் மலர்

  நீங்கள் தேடியது "girl kidnapping"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை அருகே இளம்பெண்ணை கடத்தி சென்ற திருநங்கை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருச்சிற்றம்பலம்:

  தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஒட்டங்காடு ஊராட்சி, மதன்பட்டவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி காந்திமதி.

  சம்பவத்தன்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர், காந்திமதியின் கால் வலிக்கு நாட்டு வைத்தியம் பார்ப்பதாக கூறி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இரவு நேரம் ஆனதால், திருநங்கை காந்திமதி வீட்டிலேயே தங்கிவிட்டார். மறுநாள் அதிகாலையில் வீட்டில் தூங்கிய திருநங்கையும், காந்திமதியின் மகள் அதிர்ஷ்டமேரியும் (வயது21) காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திமதி பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர்கள் 2 பேரையும் காணவில்லை.

  இந்த நிலையில், திருநங்கை விட்டுச் சென்ற செல்போன் சிம்கார்டை பரிசோதனை செய்து பார்த்த போது திருநங்கையின் படமும் அவரது பெயர் முனியம்மா என்பதும் தெரியவந்தது. அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை

   இந்த சம்பவம் குறித்து காந்திமதி திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்தார். திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிர்ஷ்டமேரியை கடத்தி சென்ற திருநங்கை முனியம்மாவை தேடி வருகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை வீடு புகுந்து உறவினர்கள் காரில் கடத்தினர். போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து அவரை மீட்டதோடு 3 பேரை கைது செய்தனர்.
  பேரையூர்:

  திருமங்கலம் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் கருப்பசாமி (வயது 21). திருமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

  அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படிப்பவர் உசிலம்பட்டியை சேர்ந்த தெய்வேந்திரன் மகள் சுவாதி (20). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சுவாதி, காதலனை திருமணம் செய்தார்.

  அதன் பிறகு ஊர் திரும்பிய அவர் கணவர் வீட்டில் தங்கியிருந்தார். இதனை அறிந்த சுவாதியின் சகோதரர் ரமேஷ் (24), தாய்மாமன் அசோக் (38), அவரது நண்பர் ஜெயபிரகாஷ் (39) ஆகியோர் காரில் நல்லம நாயக்கன்பட்டி வந்தனர்.

  அவர்கள் கருப்பசாமியின் வீட்டுக்குள் புகுந்து சுவாதியை இழுத்து வந்து காரில் கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பசாமியின் தாயார் முத்துலட்சுமி, கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார்.

  காரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

  டி.விலக்கு பகுதியில் உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தியபோது கடத்தல் கார் வந்தது. அதனை மடக்கி சுவாதியை போலீசார் மீட்டனர்.

  அவரை கடத்திய ரமேஷ், அசோக், ஜெயப்பிரகாஷ் ஆகியோரை கள்ளிக்குடி போலீசில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் காந்தி வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்.

  கைதான அசோக் மதுரை ஜெய்ஹிந்துபுரம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி அருகே ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவியை கடத்திசென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
  தேனி:

  தேனி மாவட்டம் கம்பம் மாலையம்மாள்புரத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் வைஷ்ணவி (வயது21). உத்தமபாளையத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார்.

  கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது பெற்றோருடன் கோவிந்தம்பட்டியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் வைஷ்ணவியை அங்குள்ள தனது மற்றொரு மகள் வீட்டில் விட்டுவிட்டு பாண்டி வீட்டிற்கு வந்துவிட்டார்.

  மறுநாள் வீட்டில் இருந்த வைஷ்ணவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பாண்டி உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

  தனது புகாரில் ஓடைப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவர்தான் கடத்தி சென்றிருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் கடத்தப்பட்ட மாணவியையும் அவரை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
  மதுரை:

  திருப்புவனம் அருகே உள்ள மேலராங்கியத்தைச் சேர்ந்தவர் மூக்குசாமி. இவருடைய மகன் கண்ணன் (வயது 21). இவர்கள் பாலமேடு முருகையா நகரில் வசித்தபோது பக்கத்து வீட்டில் வசித்த 17 வயது பெண்ணுடன், கண்ணணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை பெண்ணின் தாயார் கண்டித்துள்ளார்.

  இந்த நிலையில் வீட்டில் இருந்த பெண் திடீரென மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.

  அவரை கண்ணன் கடத்திச் சென்றிருக்கலாம் என பாலமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பால முருகன் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட பெண்ணை தேடி வருகிறார்.

  மதுரை கோவில்பாப்பா குடிமுல்லைத் தெருவைச் சேர்ந்தவர் மீனா (30). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

  வீட்டில் தனியாக இருந்த மீனா திடீரென்று மாயமானார். அவரை விக்கிரமங்கலம் அருகே உள்ள எழுவம்பட்டியைச் சேர்ந்த காசிநாதன் என்பவர் 3 பேருடன் சேர்ந்து கடத்திச் சென்றிருப்பதாக அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிலக்கோட்டை அருகே பள்ளி மாணவி உள்பட 4 பேர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  நிலக்கோட்டை:

  நிலக்கோட்டை அருகில் உள்ள செங்கோட்டையை சேர்ந்த பழனிச்சாமி மகள் முத்துபிரியா (வயது16). 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்து 11-ம் வகுப்பு செல்ல உள்ளார். சம்பவத்தன்று பழனிச்சாமி தனது குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுவிட்டார்.

  அந்த நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த சின்னச்சாமி மகன் குமரேசன் (26) என்பவர் முத்துபிரியாவை கடத்தி சென்று விட்டார். இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்குபதிவு அவர்களை தேடி வருகிறார்.

  நிலக்கோட்டை அருகில் உள்ள கே.புதூரை சேர்ந்தவர் ஜமாத். இவரது மனைவி கஜிதா (28). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ஜமாத் மகாராஸ்டிராவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கஜிதா தனது குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் விசித்து வந்தார்.

  சம்பவத்தன்று வீட்டில் இருந்த கஜிதாவை அவரது குழந்தைகளுடன் சேர்த்து மர்ம நபர்கள் கடத்தி சென்றுவிட்டனர். இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
  ×