என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foreign Ministry"

    • மார்க் ரூட்டே CNN தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
    • ரூட்டேவின் கூற்று உண்மைக்கு மாறான முற்றிலும் ஆதாரமற்ற ஒன்று என்று தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்திற்கு வந்திருந்த நேட்டோ (NATO) அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே CNN தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

    அப்போது பேசிய அவர், "இந்தியாவின் மீதான 50% வரிகளை டிரம்ப் விதித்தது, ரஷியா மீது உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியது. இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதினை போனில் அழைத்து உக்ரைன் போர் உக்ரைன் போரில் ரஷியாவின் வியூகம் என்ன என்று கேட்க வைத்தது" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே இதுபோன்ற எந்த உரையாடலும் நடக்கவில்லை என்றும் ரூட்டேவின் கூற்று உண்மைக்கு மாறான முற்றிலும் ஆதாரமற்ற ஒன்று என மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. 

    • அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல் தொடர்பான தகவல்கள் உட்பட, மாறிவரும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
    • இந்தியா இரு நாடுகளுடனும் நெருங்கிய மற்றும் நட்பு உறவுகளைக் கொண்டுள்ளது.

    ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில், இன்று அதிகாலை 3:30 மணிக்கு ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

    இந்த மோதல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சமீபத்திய நிகழ்வுகள் குறித்து நாங்கள் மிகுந்த கவலையுடன் இருக்கிறோம்.

    அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல் தொடர்பான தகவல்கள் உட்பட, மாறிவரும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இரு தரப்பினரும் எந்தவிதமான பதட்டத்தையும் அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு இந்தியா வலியுறுத்துகிறது.

    சூழ்நிலையைத் தணிக்கவும், அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் தற்போதைய பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். இந்தியா இரு நாடுகளுடனும் நெருங்கிய மற்றும் நட்பு உறவுகளைக் கொண்டுள்ளதுடன், அனைத்து விதமான ஆதரவையும் வழங்க தயாராக உள்ளது" என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

    மேலும் அந்த அறிக்கையில், "இரு நாடுகளிலும் உள்ள எங்கள் தூதரகங்கள் இந்திய சமூகத்துடன் தொடர்பில் உள்ளன. பிராந்தியத்தில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பாக இருக்குமாறும், உள்ளூர் பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்றும் கூறப்பட்டுள்ளது. 

    • சீன எல்லை அருகே 100 கிமீ தொலைவில் ராணுவ வீரர்கள் இணைந்து பயிற்சி.
    • கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை மீறுவதாக சீனா கருத்து.

    பெய்ஜிங்,

    இந்தியா-அமெரிக்காவின் கூட்டு ராணுவ பயிற்சியின் 18வது பதிப்பு தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில், சீன எல்லையில் இருந்து 100 கிமீ தொலைவில் நடைபெற்று வருகிறது. பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் இரு படையினரும் இணைந்து பணியாற்றுவதை மேம்படுத்துதல், போர் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவையை நோக்கமாக கொண்டு இந்த கூட்டு பயிற்சி நடைபெறுகிறது. 


    இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியுள்ளதாவது: எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்தியாவும் அமெரிக்காவும் நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சியானது 1993 மற்றும் 1996ல் சீனாவும் இந்தியாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை மீறுவதாகும்.

    மேலும் இருதரப்பு நம்பிக்கையை வளர்க்க அழ உதவவில்லை. இது குறித்த தனது கவலையை சீனா, இந்தியா தரப்பிற்கு பகிர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன, இந்திய ராணுவங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    லடாக் எல்லை அருகே சீனாவின் அத்துமீறலை தடுக்க இந்தியா ராணுவத்தை குவித்துள்ளது. சீனாவுடனான இருதரப்பு உறவு வளர்ச்சி அடைய எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைதி முக்கியம் என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×