search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exam question paper"

    • தவிர அந்தந்த பள்ளிக்கென வழங்கியுள்ள எமிஸ் கணக்கில் மட்டும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
    • தேர்வு நடத்துவதில் சிக்கல் இருந்தால் முன்கூட்டியே முதன்மை கல்வி அலுவலரிடம் தகவல் தெரிவித்து ஆலோசனை பெற வேண்டும்

    உடுமலை

    நடப்பு கல்வியாண்டில் கடந்த ஜூன் மாதம் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. மாதம்தோறும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது காலாண்டுத்தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்க ப்பட்டுள்ளன.

    அதன்படி நடுநிலை மற்றும் உயர்கல்விக்கு வருகிற , 19-ந்தேதி முதல் 27ந் தேதி, 6,7 மற்றும் 8ம் வகுப்புக்கு காலையிலும், 9 மற்றும் 10-ம் வகுப்புக்கு மதியமும் தேர்வு நடக்கவுள்ளது.மேல்நிலைக்கல்வியை பொறுத்தவரை பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை 15-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது. அவ்வகையில் பிளஸ் 1 வகுப்புக்கு காலையிலும், பிளஸ் 2 வகுப்புக்கு பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு மாணவர்களுக்கு பள்ளிகளில் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களும் ஆர்வத்துடன் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். தேர்வுக்கு உரிய ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகங்களும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

    இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- தேர்வுக்கு முந்தைய நாள் அந்தந்த தேர்வுக்கான வினாத்தாளை பள்ளி தலைமையாசிரியர்கள் எமிஸ் கணக்கு எண் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து பிரின்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வினாத்தாள் மாணவர்களுக்கு தேர்வு நாளில் வழங்கப்படும். தவிர அந்தந்த பள்ளிக்கென வழங்கியுள்ள எமிஸ் கணக்கில் மட்டும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    எக்காரணம் கொண்டும் வேறொரு பள்ளியின் எமிஸ் கணக்கை பயன்படுத்தி வினாத்தாளை பதிவிறக்கம் செய்யக்கூடாது. தேர்வு நடத்துவதில் சிக்கல் இருந்தால் முன்கூட்டியே முதன்மை கல்வி அலுவலரிடம் தகவல் தெரிவித்து ஆலோசனை பெற வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 6,8 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த கணிததேர்வில் 9-ம் வகுப்பு வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
    • வினாத்தாள் வருவதற்கு தாமதமான கால அளவை கொண்டு மாணவர்களுக்கும் தேர்வு எழுத கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று கணித பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. 6,8 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த கணிததேர்வில் சிறிய, பெரிய 9 வினாக்கள் 9-ம் வகுப்புக்குரிய 2-ம் பருவத்திற்கு உட்பட்ட பாடப்பிரிவில் இருந்து கேட்கப்பட்டிருந்தது.

    இதைப்பார்த்ததும் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தேர்வு அறையில் இருந்த ஆசிரியர்களிடம் மாணவர்கள் விளக்கம் கேட்டனர். அப்போது வினாத்தாள் மாற்றி கொடுத்தது தெரியவரவே அவர்களுக்குரிய வினாத்தாள் கொண்டுவரப்பட்டு வழங்கப்பட்டது.

    அதனைெதாடர்ந்து மாணவர்கள் பதட்டமின்றி தேர்வு எழுதினர். வினாத்தாள் வருவதற்கு தாமதமான கால அளவை கொண்டு மாணவர்களுக்கும் தேர்வு எழுத கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×