என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் பிழையா?- அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு
- பாடத்தில் இல்லாத கேள்வி கேட்கப்பட்டால் இமெயிலில் புகார் அளிக்கலாம்.
- வினா எண்ணுடன் தவறை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் தவறு இருந்தால் இமெயிலில் புகார் அளிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
வினாத்தாளில் தவறு, பாடத்தில் இல்லாத கேள்வி கேட்கப்பட்டால் இமெயிலில் புகார் அளிக்கலாம் என தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி, dgequestionpaperqueries@gmail.com என்ற இமெயிலில் மாணவர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் தவறு குறித்து புகாரளிக்கும்போது வினா எண்ணுடன் தவறை தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும் தேர்வுகள் இயக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






