search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electronic machine"

    • அறைக்கு சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
    • மின்னணு எந்திரங்களை வருகிற 18-ந்தேதி அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் 19-ந்தேதி நடைபெற இருப்பதையொட்டி வாக்குப்பதிவுக்கான மின்னணு எந்திரங்கள் தொகுதி வரியாக ஒதுக்கப்பட்டு வேட்பாளரின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    சட்டசபை தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது அதற்கு அடுத்த படியாக உள்ள அதிகாரிகளுக்கு அவற்றை ஒதுக்கீடு செய்து பிரிக்கும் பணி இன்று நடைபெறுகிறது.

    சென்னையில் 16 இடங்களில் உள்ள பயிற்சி சென்டரில் இந்த பணிகள் இன்று நடைபெற உள்ளது.

    தேர்தல் நடைபெறும் சம்பந்தப்பட்ட வார்டு வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி தலைமை அலுவலர், தேர்தல் விவர குறிப்பேடு, முகவர்களுக்கு நுழைவு அனுமதி சீட்டு, வாக்குப்பதிவு செய்யும் இடம் என உள்ளே வெளியே போன்ற இடங்களை குறிக்கும் போஸ்டர்கள், மெழுகு வர்த்திகள், சணல் கயிறு, வாக்குச் சாவடி தலைமை அலுவலருக்கான கையேடு, வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவதற்கான பயிற்சி புத்தகம், மறைவு அட்டை, வாக்குச் சாவடி தலைமை அலுவலர் பயன்படுத்தும் உறைகள் உள்பட 80 பொருட்களை பிரித்து வைக்கும் பணி இன்று நடைபெறுகிறது.

    இந்த பணியை மாநகராட்சி ஆணையரான மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் பார்வையிடுகிறார்.

    இந்த பொருட்களுடன் மின்னணு எந்திரங்களை வருகிற 18-ந்தேதி அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதுவரை இந்த பொருட்கள் அந்தந்த மையத்தில் தாசில்தார் மேற்பார்வையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வடசென்னையில் 35 பேர் போட்டியில் உள்ளதால் 3 மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளது.
    • நோட்டாவுடன் சேர்த்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 10 பொத்தான்கள் பயன்பாட்டில் இருக்கும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்தில் 15 வேட்பாளர் பெயர்கள் மற்றும் ஒரு நோட்டா (யாருக்கும் ஓட்டு இல்லை) பட்டன் இடம் பெறுகிறது. 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் சூழ்நிலையில் அதற்கேற்ப கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் இணைக்கப்படும்.

    அந்த வகையில் தென் சென்னை தொகுதியில் 41 பேர் போட்டியிடுவதால் 3 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதே போல் வடசென்னையில் 35 பேர் போட்டியில் உள்ளதால் 3 மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளது.

    மத்திய சென்னையில் 31 பேர் போட்டியிடுவதால் இங்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேட்பாளர்கள் அதிகம் போட்டியிடும் கரூரில் 4 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    குறைந்த வேட்பாளர்களை கொண்ட நாகையில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படும். நோட்டாவுடன் சேர்த்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 10 பொத்தான்கள் பயன்பாட்டில் இருக்கும். மீதமுள்ள பட்டன்கள் செயல்படாமல் முடக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கூடுதல் மின்னணு எந்திரங்கள் வைக்கப்படும் போது கடைசி பட்டனாக நோட்டா இருக்கும்.

    வாக்குப்பதிவு எந்திரத் தில் ஒட்டப்பட உள்ள வேட்பாளர்கள் பட்டியல், தபால் ஓட்டுகள் ஆகியவற்றை அச்சிடும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    120 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 58 பேர் உள்ளதால் அவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டுகள் பெறுவதற்கான முயற்சியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 24 லட்சம் மின்னணு எந்திரங்கள் தேவை என்று தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.#ElectionCommission
    புதுடெல்லி:

    தேர்தல் செலவுகளை குறைப்பதற்காகவும், அடிக்கடி தேர்தல் நடப்பதை தவிர்க்கும் விதத்திலும் நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தவேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.

    தேர்தல் கமிஷனும் இது தொடர்பாக பரிசீலித்து வருகிறது. மேலும், மத்திய சட்ட கமிஷனுடன் அண்மையில் ஆலோசனையும் நடத்தியது.

    இதுபற்றி தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், இந்த இரு தேர்தல்களுக்கும் தனித்தனியே மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் ஆகியவற்றை வைக்கவேண்டும். நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு 10 லட்சம் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களும் இதே எண்ணிக்கையிலான ஒப்புகை சீட்டு எந்திரங்களும் தேவைப்படும்.

    மேலும் 20 சதவீத எந்திரங்கள் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்படவேண்டும். அதன்படி பார்த்தால் மேலும் 2 லட்சம் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் தேவைப்படும். எனவே ஒட்டு மொத்த கணக்கின்படி 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் போது மொத்தம் 24 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், இதே எண்ணிக்கையிலான ஒப்புகை சீட்டு எந்திரங்களும் தேவையாக இருக்கும்.

    எனவே தற்போதைய நிலையில் மேலும் 12 லட்சம் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங் களை வாங்குவதற்கு கூடுதலாக ரூ.4,500 கோடி தேவைப்படும். இது இப்போதைய கொள்முதல் விலை நிலவரம் ஆகும்.

    மேலும் ஒரு வாக்குச் சாவடியில் தற்போது 5 தேர்தல் பணியாளர்கள் என்ற எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கும்.

    2024-ம் ஆண்டு மீண்டும் ஒரே நேரத்தில் இதுபோல் நாடா ளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டால், 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை அதன் ஆயுட்காலம் முடிவடைவதையொட்டி அகற்ற வேண்டியும் இருக்கும். இதற்கும் ரூ.1,700 கோடி செலவு பிடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனின் கண்காணிப்பு எல்லைக்குள்ளும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும் வராது என்று தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது. பா.ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 6 தேசிய கட்சிகள் வசூலித்த நன்கொடைகள் குறித்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க கோரி புனேவை சேர்ந்த விகார் துர்வே என்பவர் தேர்தல் கமிஷனிடம் கேட்டு இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் தேர்தல் கமிஷன் மேற்கண்டவாறு கூறி உள்ளது.

    இந்த 6 தேசிய கட்சிகளும் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் 2017-18-ம் நிதி ஆண்டுக்கான நன்கொடை பத்திரங்கள் மூலம் பெற்ற விவரங்களை தெரிவிக்கும் என்றும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

    மத்திய தகவல் கமிஷன், 6 தேசிய கட்சிகளும் பெற்ற நன்கொடையை வெளிப்படைத் தன்மை சட்டவிதிகளின்படி கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் தேர்தல் கமிஷன் இதுபோல் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. #ElectionCommission
    ×