என் மலர்
நீங்கள் தேடியது "DMK Women's Team"
- நெல்லை கிழக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அமைப்பாள ர்கள், துணை அமைப்பாளர் களுக்கான நேர்காணல் நாளை மறுநாள் மதியம் மகாராஜநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடக்கிறது.
- மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்தவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்ப தாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க நெல்லை கிழக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அமைப்பாள ர்கள், துணை அமைப்பாளர் களுக்கான நேர்காணல் நாளை மறுநாள் மதியம் மகாராஜநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடக்கிறது.
நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் மற்றும் மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி ஆகியோர் முன்னிலையில் நடக்க உள்ள இந்த நேர்காணலில் மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்தவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத பா.ஜ.க. அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகிறது.
- தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை:
மணிப்பூர் மாநிலத்தில் சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டனர். மனிதாபிமானமற்ற இந்த கொடுமையான சம்பவம் அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்தது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத பா.ஜனதா அரசை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசுகையில், மணிப்பூர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்தார்.






