என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் மேற்கு மண்டல மாநாடு..!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றடைந்தார்.
- மகளிர் அணியினர் பலர் இன்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவிய தொடங்கினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் இன்று மாலை 4 மணிக்கு 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய 6 மாவட்ட ங்களில் உள்ள 35 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்கின்றனர்.12 ஆயிரத்து 380 வாக்குச்சாவடி களில் ஒவ்வொரு வாக்கு ச்சாவடியில் இருந்தும் 15 பேர் என மொத்தம் 1.50 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். மகளிர் அணியினர் பலர் இன்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவிய தொடங்கினர்.
மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றடைந்தார். அங்கு, முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், "வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் திமுக மகளிர் அணி மேற்கு மண்டல மாநாடு!
மாலை உங்களைச் சந்திக்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.






