என் மலர்
நீங்கள் தேடியது "District Secretary announced"
- நெல்லை கிழக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அமைப்பாள ர்கள், துணை அமைப்பாளர் களுக்கான நேர்காணல் நாளை மறுநாள் மதியம் மகாராஜநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடக்கிறது.
- மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்தவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்ப தாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க நெல்லை கிழக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அமைப்பாள ர்கள், துணை அமைப்பாளர் களுக்கான நேர்காணல் நாளை மறுநாள் மதியம் மகாராஜநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடக்கிறது.
நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் மற்றும் மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி ஆகியோர் முன்னிலையில் நடக்க உள்ள இந்த நேர்காணலில் மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்தவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






