search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dawood"

    உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ. உமா சங்கர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். #BSPMLA #UmaShankar
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியா தொகுதியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உமா சங்கர். இவர் தலைநகர் லக்னோவில் பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 8-ந்தேதி இ.மெயிலுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் புகைப்படம் இருந்தது. அதோடு “நீங்கள் பாலியா தொகுதி மக்களுக்காக உழைக்கிறீர்கள். நீங்கள் அதை தொடர விரும்பினால் எங்களுக்கு ரூ.1 கோடி தர வேண்டும். இல்லையென்றால் ஒரே ஒரு துப்பாக்கி குண்டு உங்களுக்கு போதும். எந்த நேரத்திலும் உங்களை கொலை செய்வோம்” என்ற வாசகமும் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விவகாரம் தொடர்பாக உமா சங்கர் ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #BSPMLA #UmaShankar #Tamilnews 
    மிரட்டி பணம் பறித்தது தொடர்பான வழக்கில் தாவூத் இப்ராகிம் அவரது தம்பி இக்பால் கஸ்கர் மற்றும் அனீஸ் இப்ராகிம் ஆகியோர் மீது மராட்டிய மாநில போலீசார் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
    மும்பை :

    இந்தியாவில் நடைபெற்ற 1993 மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள் உள்பட பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதன்பேரில் பாகிஸ்தானிடம் தகவல்கள் வழங்கியும், அந்த நாடு தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை. அத்துடன் தங்கள் நாட்டில் அவர் இல்லவே இல்லை என உறுதிபட மறுத்து வருகிறது.

    உலக அளவில் 2–வது மிகப்பெரும் கோடீஸ்வர குற்றவாளியான தாவூத் இப்ராகிமை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்து உள்ளது. இவரது தம்பி இக்பால் கஸ்கர் மும்பையில் வசித்து வருகிறார். தாவூத் இப்ராகிமின் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களை இவர் கண்காணித்து வருகிறார்.  

    மும்பை, தானேவில் உள்ள கோரை பகுதியில் 38 ஏக்கர் நிலம் கைமாற்றப்பட்டது தொடர்பாக இக்பால் கஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பிரபல கட்டுமான தொழிலதிபர் ஒருவரை மிரட்டி ரூ.3 கோடி பணம் பறித்துள்ளார். கட்டுமான அதிபர் தானே பகுதி போலீசாரிடம் கடந்த வருடம் அளித்த புகார் அடிப்படையில் இக்பால் கஸ்கரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையின் போது இக்பால் கஸ்கர் மட்டுமல்லாது தாவூத் இப்ராகிம் மற்றும் அனீஸ் இப்ராகிம் ஆகியோரும் மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் ஈடுபட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இந்நிலையில், தாவூத் இப்ராகிம், இக்பால் கஸ்கர் மற்றும் அனீஸ் இப்ராகிம் ஆகியோர் மீது தானே போலீசார் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். தாவூத் தரப்பு மிரட்டி பணம் பறித்தது தொடர்பான அனைத்து ஆதாரங்களுடனும் இந்த குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

    தானே காசர்வடவலி பகுதியை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளரிடம், தாவூத் இப்ராகிம் பெயரை சொல்லி மிரட்டி, ரூ.30 லட்சமும், ரூ.5 கோடி மதிப்பிலான 4 வீடுகளையும் கடந்த ஆண்டு அபகரித்த வழக்கில் இக்பால் கஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.    
    மும்பையில் ஓட்டல் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான ராம்தாஸ் ரகானே காவல்துறையால் கைது செய்யப்பட்டார். #DawoodIbrahim
    மும்பை:

    மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட தாவூத் இப்ராகிம் சகல வசதிகளுடன் துபாய் நகரில் வாழ்ந்து வருகிறார். தாவூத் இப்ராகிமின் அடியாட்கள் இந்தியாவில் பிரபல சினிமா நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் ஆகியோரை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.

    இதுமட்டுமின்றி, சர்வதேச அளவில் கிரிக்கெட் சூதாட்ட வளையத்தையும் நிர்வகித்து வரும் தாவூத் இப்ராகிமுக்கு இந்தியாவில் உள்ள அவரது அடியாட்கள், வசூலித்து வரும் மாமூலில் இருந்து பெரும்தொகை தாவூத் இப்ராகிமின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில், மும்பையில் உள்ள பிரபல ஓட்டல் அதிபரிடம் தாவூத் இப்ராகிமின் அடியாட்கள் தொலைப்பேசி மூலமாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர். தங்களது குழுவைச் சேர்ந்த ராம்தாஸ் ரகானே என்பவனிடம் 50 லட்சம் ரூபாய் மாமூலாக தர வேண்டும் இல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவோம் என்று எதிர்முனையில் பேசியவர்கள் மிரட்டியுள்ளனர்.
     
    மேலும், உடனடியாக ராம்தாஸ் ரகானேவிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்தனுப்புமாறும் வற்புறுத்தினர். இந்த மிரட்டல் தொடர்பாக அந்த ஓட்டல் அதிபர் மும்பை நகர போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கண்காணித்து வந்த மும்பை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் திலீப் சாவந்த், ராம்தாஸ் ரகானேவை இன்று கைது செய்தார்.

    பாகிஸ்தானில் இருக்கும் தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள் அறுவுறுத்தியபடி இந்த மிரட்டலை இங்குள்ள தாதாக்கள் அந்த ஓட்டல் அதிபருக்கு அனுப்பி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பணம் கொடுக்காத ஓட்டல் முதலாளி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட போது ராம்தாஸ் ரகானேவை கைது செய்த போலீசார் அகமதுநகர் மாவட்டம், சங்கம்நெர் பகுதியில் உள்ள அவனது வீட்டில் நடத்திய சோதனையில் கைத்துப்பாக்கியும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் குறிப்பிட்டனர்.

    கைதான ரகானே மீது மும்பை குஜராத் பகுதியில் ஏரளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், கடந்த 2011-ம் ஆண்டு மும்பை பகுதியில் பிரபல கட்டுமான நிறுவன அதிபர் மனிஷ் தோலாக்கியா மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்திலும் இவன் தொடர்புடையவன் என்பதும் தெரியவந்துள்ளது.

    இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரகானேவை வரும் 30-ம் தேதி வரை போலீசார் காவலில் எடுத்துவிசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #DawoodIbrahim
    ×