என் மலர்
சினிமா செய்திகள்

தாவுத்- திரைவிமர்சனம்
மும்பையில் இருந்தபடி தமிழ்நாட்டில் போதை பொருள் கடத்தல் தொழிலை செய்து வருகிறார் தாவூத். யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக ஒரு போதை கடத்தல் சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார்.
ஒரு பக்கம் யார் இந்த தாவூத் என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் அர்ஜெய் தலைமையிலான காவல்துறை தமிழ்நாட்டில் இருந்து கடத்த இருக்கும் போதை பொருளை கைப்பற்றவும் தீவிரம் காட்டுகிறது.
மறுபக்கம், தாவுத்தின் கடத்தல் பணிகளை பார்த்து வந்த தீனா, போதை பொருளை கைப்பற்ற திட்டமிடுகிறார். மற்றொரு தரப்பும் தாவுத்தின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கிறது.
இப்படி இருக்கையில், தாவுத்தின் போதைப் பொருள் சரக்கை சரியான இடத்தில் கொண்டு சேர்க்க வழக்கமான ஆட்களை பயன்படுத்தாமல், வாடகை கார் ஓட்டுனரான லிங்காவை தேர்வு செய்கிறார்.
லிங்காவும் பணத் தேவைக்காக கடத்தலில் ஈடுபடுகிறார். இறுதியில், திட்டமிட்டபடி லிங்கா தாவுத் சரக்கை கொண்டு போய் சேர்த்தாரா? தாவுத்தின் பின்னணி என்ன? என்பது படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்
கதாநாயகனாக வரும் லிங்கா, கதாபாத்திரத்திற்கு நிறைவாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் விதமாக அவரது நடிப்பு இருக்கிறது. நாயகியாக வரும் சாரா ஆச்சர், வில்லன் கூட்டத்திலேயே வலம் வருகிறார். அர்ஜெய், திலீபன், சாய் தீனா, சரத்ரவி, அபிஷேக், சாரா, வையாபுரி, ராதாரவி உள்ளிட்டோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தம்.
இயக்கம்
படத்தின் கதை பரபரப்பாக செல்லும் விதத்தில் அமைத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் ராமன். விறுவிறுப்பான காட்சிகள் படத்தை சலிப்பில்லாமல் எடுத்துச் செல்ல வைத்திருக்கிறது. தாவுத் யார் என்ற கேள்வி எழுகிறது ஆனால், அதற்கான பதிலை இன்னும் ஆழமாக சொல்லியிருக்கலாம்.
இசை
ராகேஷ் அம்பிகாபதியின் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவு
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் ஆகியோரது கேமரா பதிவு திரைக்கதைக்கு கச்சிதம்.






