search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheque Fraud case"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.14 லட்சத்தை அட்வான்ஸ் தொகையாக பெற்றுக் கொண்டுள்ளார்.
    • பணத்தை திருப்பி கொடுக்காததால் முனியசாமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், ராமநாதபுரம் மாவட்டம் தேவி பட்டிணத்தை சேர்ந்த முனியசாமி என்பவருக்கு ரூ.15 கோடி லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்தை அட்வான்ஸ் தொகையாக பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால், கடனும் வாங்கி கொடுக்காமல் பெற்று கொண்ட ரூ.14 லட்சத்தையும் திருப்பி கொடுக்காததால் முனியசாமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


    இந்த வழக்கு நீதிமன்றத்தில் பல முறை விசாரணைக்கு வந்தும் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாததால் இன்று நடுவர் நீதிமன்ற நீதிபதி பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இந்த பிடிவாரண்ட் சென்னை, அண்ணா நகர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 2-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பலரை இதுபோன்று ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் 24 மணிநேரத்தில் கைது செய்தனர்.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் அனிஷ்பிரசன்னா (வயது 27) இவர் ராமநாதபுரம் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் கோவை திருச்சி ரோட்டில் கார் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர்.நடத்தி வருகிறேன். தனது நிறுவனத்தில் சாவணன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று மேலாளர் சரவணன் தங்களது நிறுவன கணக்குகளை சரிபார்த்தார். அப்போது நிறுவனத்தின் கணக்கில் இருந்து ரூ.42,98,100 எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையத்து, எங்களது நிறுவனம் வரவு செலவு வைத்துள்ள வங்கியில் விசாரித்தபோது வங்கி மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் வங்கியில் எங்களது காசோலையையும் காண்பித்தனர்.

    அதில் காசோலையை கொண்டு வந்து வங்கியில் செலுத்தியது எங்களது நிறுவனத்தில் வேலை செய்து வந்த கணக்காளர் சேலத்தை ச்சேர்ந்த வெங்கடசு ப்ரமணியன் என்பதும் தெரியவந்தது. அவர் நிறுவனத்தின் காசோலையத் திருடி போலியாக கையெழுத்து போட்டு திருவ ண்ணா மலை யில் உள்ள நபரின் வங்கி கணக்கிற்கு ரூ.42,98,100 மாற்றி உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தலைம றைவாக இருந்தவர்களை தேடி திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய இடங்களுக்கு சென்றனர்.

    அப்போது அங்கு பதுங்கியிருந்த மோசடிக்கு துணைபோன ஆரணியை சேர்ந்த சிவா, புதுச்சேரியை சேர்ந்த கார்த்திக், தினேஷ்பாபு ஆகியோரை 24 மணிநேரத்தில் கைது செய்தனர். அவர்கள் மோசடி செய்த ரூ.42,98,100-யை பறிமுதல் செய்தனர்.பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ‘செக்’ மோசடி வழக்கில் டாக்டருக்கு பட்டுக்கோட்டை கோர்ட்டில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் டாக்டர் ராஜேந்திரன்(வயது 65). இவர், அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். தான் வாங்கிய கடனுக்காக ரூ.12 லட்சத்துக்கு டாக்டர் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியனுக்கு செக் கொடுத்துள்ளார்.

    அந்த செக்கை பாலசுப்பிரமணியன் வங்கியில் செலுத்தியபோது அது பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இதனால் டாக்டர் ராஜேந்திரன் மீது பாலசுப்பிரமணியன் பட்டுக்கோட்டை குற்றவியல் விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2016-ம் ஆண்டு முதல் விசாரணை நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    வழக்கை விசாரித்த படடுக்கோட்டை குற்றவியல் விரைவு கோர்ட்டு நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் ராஜேந்திரனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.12 லட்சத்தை கோர்ட்டில் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். பின்னர் டாக்டர் ராஜேந்திரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 
    திருத்துறைப்பூண்டியில் காசோலை மோசடி வழக்கில் வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தோப்படி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரிடம் கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடியை சேர்ந்த ஹாஜாமைதீன் (வயது35) என்பவர் ரூ.5 லட்சம் கடன் பெற்றார். இந்த கடனை திரும்ப செலுத்துவதற்காக ஹாஜாமைதீன் வழங்கிய காசோலையை செல்வராஜ், ஒரு வங்கியில் செலுத்தினார். அப்போது ஹாஜாமைதீனின் வங்கி கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது.

    இதையடுத்து செல்வராஜ், ஹாஜாமைதீன் மீது திருத்துறைப்பூண்டி விரைவு கோர்ட்டில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த விரைவு கோர்ட்டு நீதிபதி கண்ணன், ஹாஜாமைதீனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் கடன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார். 
    ×