search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cash loaded in tempos"

    • நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் மீது இதுவரை இல்லாத அளவிற்கு குற்றம்சாட்டியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
    • இது தொடர்பாக அவருக்கு தெரிந்திருந்தால், எதுவுமே செய்யாமல் இருந்தது ஏன்?.

    அதானி, அம்பானி டெம்போ மூலம் எதிர்க்கட்சிக்கு பணம் கொடுத்ததாக பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகள் விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அதானி, அம்பானி குற்ச்சாட்டு குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடியை தடுப்பது எது? என ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    கடந்த 8-ந்தேதி டெம்போ மூலம் எதிர்க்கட்சிகளுக்கு அதானி மற்றும் அம்பானி பணம் சப்ளை செய்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் மீது இதுவரை இல்லாத அளவிற்கு குற்றம்சாட்டியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இது தொடர்பாக அவருக்கு தெரிந்திருந்தால், எதுவுமே செய்யாமல் இருந்தது ஏன்?. அவரிடம் அத்தகைய விரிவான மற்றும் நடவடிக்கை எடுக்கக்கூடிய தகவல்கள் இருந்தால் விசாரணை அமைப்புகளை (சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை) பயன்படுத்த தடுத்தது என்ன?

    கடந்த ஆண்டு ஹம் அதானி கே ஹைன் கவுன் (HAHK) சீரிஸ் கீழ் பிரதமரிடம் 100 கேள்விகளைக் கேட்டோம். தற்போது, டெம்போக்களில் பணப் பைகளைப் பெறுவது குறித்து நாட்டு மக்களுக்கு வாக்குமூலத்தோடு தனது நீண்ட மௌனத்தைக் கலைக்கிறாரா பிரதமர்?

    அதானியை சட்டத்திற்குப் புறம்பாக பாதுகாக்க பிரதமர் எவ்வளவு தூரம் சென்றார் என்பது பெரும்பாலான இந்தியர்களுக்கு நன்கு தெரியும்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    ×