search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Break Up"

    • அப்பெண்ணின் ஆதிக்க கட்டுப்பாடுகள் பிடிக்காமல் அவரை விட்டு பிரிய விரும்பினார் கேஷவ்
    • சட்ட வல்லுனர்கள் மற்றும் மாந்திரீகவாதிகளின் உதவியையும் கேஷவ் நாடியிருக்கிறார்

    ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் உள்ளது ராம்கஞ்ச் மண்டி. இப்பகுதியை சேர்ந்தவர் புஷ்பேந்திரா என்கிற கேஷவ் (25).

    கேஷவும் ஒரு பெண்ணும் 5 வருடங்களாக காதலித்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல, கேஷவ் மீது அப்பெண் நண்பர் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். கேஷவ் பிற நண்பர்களுடன் பழகுவதையும் தடை செய்தார். இதனால் இருவருக்குமிடையே பல முறை சண்டை நடந்திருக்கிறது.

    கேஷவ், அந்த பெண் நண்பரின் பெயரை "லடாக்கு விமானம்" (போர் விமானம்) என்ற பெயரில் தனது அலைபேசியில் வைத்திருந்திருக்கிறார்.

    அப்பெண்ணின் ஆதிக்க கட்டுப்பாடுகள் பிடிக்காமல் அவரைவிட்டு பிரிய விரும்பிய கேஷவ், பிரேக்அப் செய்வதற்கான வழிகளை ஆராய்ந்திருக்கிறார்.

    கூகுள், யூடியூப் போன்றவற்றில் தேடியதோடு இல்லாமல், சட்ட வல்லுனர்கள் மற்றும் மாந்திரீகவாதிகளின் உதவியையும் அவர் நாடியிருக்கிறார். ஆனால் அவருக்கு இதில் சாதகமான வழி பிறக்கவில்லை.

    இந்நிலையில் கேஷவை வீட்டில் விட்டு விட்டு மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஒரு குடும்ப நிகழ்ச்சிக்காக சென்றிருக்கிறார்கள்.

    திரும்பி வந்தபோது எத்தனை முறை அழைத்தாலும், கேஷவ் வந்து கதவை திறக்கவில்லை.

    அலைபேசியை தொடர்பு கொண்டபோதும் கேஷவிடமிருந்து பதிலில்லை.

    சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, தூக்கில் சடலமாக தொங்கினார்.

    கேஷவை தற்கொலைக்கு தூண்டியதாக கேஷவின் காதலி மீது குற்றம் சாட்டி கேஷவின் தந்தை காவல்துறையிடம் புகாரளித்துள்ளார்.

    ஆனால், இதனை அந்த பெண் மறுத்துள்ளார். கேஷவ் இறப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கேஷவிற்கு பொருளாதார சிக்கல்கள் இருந்ததாகவும், அவருக்கு யாரும் உதவ முன் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    • கற்களை தூக்கி பஸ்சில் வீசியதில் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது.
    • குடிபோதையில் கற்களை வீசி பஸ்ஸை சேதப்படுத்தியது தெரிய வந்தது.‌

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தையில் போக்குவரத்து பணிமனை உள்ளது.

    இந்த பணிமனையில் இருந்து தினமும் ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பணிமனையில் இருந்து கும்பகோ ணத்துக்கு செல்லும் அரசு பஸ்சை தஞ்சை அடுத்த மாத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த டிரைவர் ரத்தினசாமி (வயது 53 ) தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு சென்று பயணிகளை ஏற்றுவதற்காக ஓட்டினார்.

    பணிமனையில் இருந்து பஸ் வெளியே புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

    அப்போது கீழவாசல் பூமால் ராவுத்தன்கோவில் தெருவை சேர்ந்த கார்த்தி (25) திடீரென கற்களை தூக்கி பஸ்சில் வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது.

    இது குறித்து ரத்தினசாமி தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    முதல் கட்ட விசார ணையில் கார்த்தி, குடிபோதையில் கற்களை வீசி பஸ்ஸை சேதப்படுத்தியது தெரிய வந்தது.‌

    இருந்தாலும் பஸ்சை சேதப்படுத்தியதற்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×