என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரேப்அப்"

    • இளம்பெண் ஒருவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • வீடியோ வலைதளத்தில் வேகமாக பரவிய நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் தனக்கு என்ன நடந்தாலும் அதனை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.

    அதில் சில வீடியோக்கள் வேடிக்கையாக இருக்கும். அந்த வகையில் இளம்பெண் ஒருவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரேக்-அப் மெசேஜ் என்ற தலைப்பில் இளம்பெண் பகிர்ந்த அந்த வீடியோவில் அவர் ஒருவருடன் உறவை முறித்து கொண்டதற்கான பிரேக்-அப் மெசேஜ் செல்போனில் பகிர்வது போன்று காட்சி உள்ளது.

    அதோடு அந்த மெசேஜ் அவர் அனுப்பியதும் அவருடன் அமர்ந்துள்ள குடும்பத்தினர் கைதட்டி ஆரவாரம் எழுப்பி அவரது பிரேக்-அப்பை குடும்பமாக கொண்டாடுவது போன்றும் காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ வலைதளத்தில் வேகமாக பரவிய நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    ×