search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beer bottle"

    • தலையில் இருக்கும் பீர் பாட்டில் கீழே விழாதவாறு லாவகமாக ஆடுவது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது.
    • வீடியோ 54 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    உணவு விடுதி ஒன்றில் மூதாட்டி ஒருவர் பீர் பாட்டிலை தலையில் வைத்து கொண்டு அமிதாப் பச்சன் படப்பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    புடவை கட்டிய அந்த மூதாட்டி, அமிதாப்பச்சனின் 'லாவரிஸ்' படத்தில் இடம்பெற்ற 'மேரே ஆங்னே மே' என்ற பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடுகிறார். இடை, இடையே விரல்களை வாயில் வைத்து விசில் அடித்தபடி அவர் நடனம் ஆட, அவருக்கு அருகே ஒரு வாலிபரும் நடனம் ஆடி மூதாட்டியை உற்சாகமூட்டுகிறார்.

    தலையில் இருக்கும் பீர் பாட்டில் கீழே விழாதவாறு லாவகமாக ஆடுவது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த வீடியோவை சித்தேஷ் போபாடி என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வீடியோ 54 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலர், மூதாட்டியின் நடனத்தை பாராட்டினர். அதே நேரம் சில பயனர்கள், பீர் பாட்டிலை தலையில் சுமந்து ஆடுவதை விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர்.


    • வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.
    • விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    மதுராந்தகம்:

    திருவள்ளூரில் இருந்து விழுப்புரம் நோக்கி பீர் பாட்டில் ஏற்றிக்கொண்டு நேற்று நள்ளிரவு லாரி சென்றது. இரவு 12 மணியளவில் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதில் லாரியில் இருந்த பீர்பாட்டில்கள் உடைந்து பீர் ஆறாக ஓடியது. நள்ளிரவு நேரம் என்பதால் லாரியை மீட்டு அதில் இருந்த பீர் பாட்டில் பெட்டிகளை வேறொரு லாரிக்கு மாற்றமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் மின்விளக்கு இல்லை. இதைத்தொடர்ந்து மதுராந்தகம் போலீசார் லாரி கவிழ்ந்த இடத்தில் விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    எனினும் விபத்து நடந்த சிறிது நேரத்தில் போலீசார் வருவதற்கு முன்பே அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றனர். அவர்களை போலீசார் எச்சரித்தனர்.

    இதையடுத்து பீர்பாட்டில்களை எடுத்தவர்கள் அங்கேயே ஆங்காங்கே வீசி விட்டு சென்றனர். அந்த பீர் பாட்டில்களை போலீசார் சேகரித்தனர். இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    இன்று காலை மீட்பு வாகனம் வந்ததும் லாரி மீட்கப்பட்டது. எனினும் ஏராளமான பீர்பாட்டில்கள் உடைந்து வீணானது. சாலை யோரம் லாரி கவிழ்ந்து கிடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று இரவு அரிச்சந்திரன் மகிழ்ச்சிபுரம் முனியசாமி கோவில் அருகே நண்பர்களோடு சேர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.
    • மது போதையில் இருந்த அவரது நண்பர்கள் அங்கிருந்த பீர்பாட்டிலை உடைத்து அரிச்சந்திரன் முதுகில் குத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மில்லர்புரம் 6-வது தெருவை சேர்ந்தவர் அரிச்சந்திரன். (வயது 25). இவர் இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு இவர் மகிழ்ச்சிபுரம் முனியசாமி கோவில் அருகே நண்பர்களோடு சேர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் மது போதையில் இருந்த அவரது நண்பர்கள் அங்கிருந்த பீர்பாட்டிலை உடைத்து அரிச்சந்திரன் முதுகில் குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த அரிச்சந்திரன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.

    இதனால் செய்வதறியாது திகைத்த அவரது நண்பர்கள் அரிச்சந்திரனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அங்கு அரிச்சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரபல ரவுடி அறிவு என்பவர் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினார்.
    • ஆத்திரமடைந்த அறிவு பீர் பாட்டிலால் மைக்கேல் ராஜை தாக்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நியூ பார்த்திமா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (வயது 58) தொழிலாளி.

    இவர் சைக்கிளில் விளார் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    ஒரு தனியார் மண்டபம் அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த பிரபல ரவுடி அறிவு என்பவர் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினார்.

    அப்போது அவர் குடிக்க தண்ணீர் பாட்டில் கொடுக்குமாறு மைக்கேல் ராஜிடம் கேட்டார்.

    அதற்கு அவர் என்னிடம் தண்ணீர் பாட்டில் இல்லை என்று கூறினார்.

    இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அறிவு மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் மைக்கேல் ராஜை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த மைக்கேல்ராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து ரவுடி அறிவை தேடி வருகிறார்.

    • 6 பேருக்கு வலைவீச்சு
    • கூட்டாளி விக்கி மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் எட்டியானிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை கோலாஸ் நகர் பிரான்சுவா தோப்பு பகுதியை சேர்ந்தவர் எட்டியான் என்ற பவுல்ராஜ் (வயது25). பெயிண்டர். திருமணமாகவில்லை.

    இவருக்கும் ராசு உடையார் தோட்டத்தை சேர்ந்த சேது என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பார்க்கும் இடங்களில் எல்லாம் தகராறு செய்வது போல் நடந்த கொள்வார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எட்டியான் உப்பளம் துறைமுக மைதானத்திற்கு சென்று இயற்கை உபாதை கழித்துவிட்டு வந்துக் கொண்டி

    ருந்தார்.அப்போது அங்கு வந்த சேது, அவரது கூட்டாளி விக்கி மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் எட்டியானிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    மேலும் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் அவரை குத்தினர். மேலும் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த எட்டியான் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சேது உள்பட 6 பேரையும் தேடி வருகின்றனர்.

    • பிரதீப் குமார் தகராறு செய்து, பீர் பாட்டிலால் ராஜீவ் காந்தியை தாக்கினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்குமாரை கைது செய்தனர்.

    மதுரை

    கீழகள்ளந்திரியை சேர்ந்தவர் மகாராஜன். இவரது மகன் ராஜீவ் காந்தி (36). இவர் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். மதுரை ஆண்டார் கொட்டாரம், அய்யனார் நகரை சேர்ந்தவர் பிரதீப் குமார் (46). இவருக்கும், ராஜீவ்காந்திக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் பாண்டிகோவில் ரோட்டில் உள்ள பாரில் ராஜீவ் காந்தி, பிரதீப் குமார் ஆகிய இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப் குமார் தகராறு செய்து, பீர் பாட்டிலால் ராஜீவ் காந்தியை தாக்கினார். இந்த சம்பவம் குறித்து ராஜீவ் காந்தி மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப்குமாரை கைது செய்தனர்.

    • உடைந்த வேகத்தில் பீர்பாட்டிலின் கண்ணாடி சிதறி செந்தில்குமாரின் கண்ணில் பட்டது.
    • டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள திம்மம்பாளையத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த கடையில் அங்களக்கரைபுதூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது40) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று வழக்கம் போல் டாஸ்மாக் கடையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வாடிக்கையாளர் ஒருவர் மதுவாங்குவதற்காக டாஸ்மாக் கடைக்கு வந்தார்.

    அவர் கடையில் இருந்த செந்தில்குமாரிடம் 2 பீர்பாட்டில்கள் தருமாறு கேட்டார். இதையடுத்து செந்தில்குமாரும் பாட்டில்களை எடுத்து வந்தார்.

    பின்னர் அந்த பாட்டில்களில் ரூ.10க்கான ஸ்டிக்கர் ஒட்டினார். ஒரு பாட்டிலில் ஒட்டி, அதனை வாடிக்கையாளரிடம் கொடுத்து விட்டு, மற்றொரு பாட்டிலில் ரூ.10க்கான ஸ்டிக்கரை ஒட்டி கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பீர்பாட்டில் உடைந்தது.

    உடைந்த வேகத்தில் பீர்பாட்டிலின் கண்ணாடி சிதறி, செந்தில்குமாரின் கண்ணில் பட்டது. இதில் கண்ணாடி அவரது கருவிழியை கடுமையாக தாக்கியது.

    வலியால் அலறி துடித்த அவரை அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கண் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    அப்போது, கருவிழியில் கண்ணாடி கடுமையாக தாக்கியதில் கண்பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்குமாரை கோவை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர், உதவி மேலாளர் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    மேலும் அவருக்கு உரிய சிகிச்சை விரைவாக அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவதாக கூறி சென்றனர். இதற்கிடையே வெயிலின் தாக்கத்தாலேயே பீர்பாட்டில் வெடித்ததாக கூறப்படுகிறது.

    • சங்கரன்கோவில் பஜார்பகுதியில் உள்ள டீக்கடையில் பாக்கியராஜ் நின்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த பாரதிநகரை சேர்ந்த மாரியப்பன், கருப்பசாமி மற்றும் 2 பேர் சேர்ந்து பாக்கியராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சங்கரன்கோவில் :

    சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 50). இவர் ஒப்பந்த அடிப்படை யில் கட்டிட வேலைகள் செய்து வருகின்றார்.

    இந்நிலையில் அப்பகுதி யில் பாரதிநகரில் உள்ள ஒருவர் வீட்டில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க ஒப்பந்தம் பேசியதாகவும், அந்த தொகையில் கொஞ்சம் பாக்கி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று சங்கரன் கோவில் பஜார் பகுதியில் உள்ள டீக்கடையில் பாக்கிய ராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாரதிநகரை சேர்ந்த மாரியப்பன், கருப்பசாமி மற்றும் 2 பேர் சேர்ந்து பாக்கியராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திடீரென 4 பேரும் தங்களது இடுப்பில் மறைத்து வைத்திருந்த பீர்பாட்டிலால் பாக்கிய ராஜின் தலையில் அடித்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த பாக்கியராஜ் சங்கரன் கோவில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கரன் கோவில் டவுன் போலீசார் மாரியப்பன், கருப்பசாமி உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • திண்டிவனம் அருகே உள்ள வெளியனூர் எரலி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் ஊர் ஊராக திருவிழா மற்றும் கண்காட்சி போன்ற பொது இடங்களில் ராட்டினம் போட்டு வேலை செய்கிறார்.
    • அதற்கு ராட்டினம் அமைப்பவர்கள் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி வாங்கிதான் ராட்டினம் அமைக்கிறோம் என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த கிஷோர் மற்றும் சாந்த குமார் தகாதவார்த்தைகளால் திட்டினார்.

    புதுச்சேரி:

    திண்டிவனம் அருகே உள்ள வெளியனூர் எரலி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் ஊர் ஊராக திருவிழா மற்றும் கண்காட்சி போன்ற பொது இடங்களில் ராட்டினம் போட்டு வேலை செய்கிறார்.

    இந்த நிலையில் புதுவை கதிர்காமம் செடலை முன்னிட்டு ஏழாத்தான் குளம் என்ற பகுதியில் ராட்டினம் அமைப்பதற்காக வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கிஷோர் மற்றும் அவரது நண்பர் சாந்தகுமார் ஆகியோர் வந்தனர். அவர்கள் எங்களுக்கு தெரியாமல் எப்படி ராட்டினம் போடலாம் என கேட்டனர். அதற்கு ராட்டினம் அமைப்பவர்கள் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி வாங்கிதான் ராட்டினம் அமைக்கிறோம் என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த கிஷோர் மற்றும் சாந்த குமார் தகாதவார்த்தைகளால் திட்டினார். மேலும் பீர்பாட்டிலை உடைத்து சாந்த குமார் ராட்டினம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் கிஷோர் கார்த்திக்கை குத்தினார்.

    எங்களை மீறி ராட்டினம் அமைத்தால் உங்களை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். ராட்டினம் அமைப்பவர்கள் திருப்பி தாக்கியதில் கிஷோர் மற்றும் சாந்த குமாருக்கு காயம் ஏற்பட்டது. பீர் பாட்டிலால் குத்தியதில் காயமடைந்த தினேஷ் குமாரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமத்தித்தனர்.

    இதுகுறித்து எரலி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த புருஷோத்தமன் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தவளக்குப்பத்தில் மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.
    • இதனால் பிரச்சினை ஏற்படும் என கருதி வினோத் தனது நண்பருடன் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் வினோத்தும் இளந்தமிழனும் மடுகரை ரோட்டில் வந்து கொண்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பத்தில் மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.

    தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையம் புதுநகரை சேர்ந்தவர் வினோத் (வயது28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகம் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் வினோத் தவளக்குப்பத்தில் உள்ள ஒரு மதுக்கடைக்கு தனது நண்பர் இளந்தமிழன் என்பவருடன் மது குடிக்க சென்றார். அப்போது அங்கு ஏற்கனவே சண்முகம் அவரது நண்பர்களுடன் மது குடித்து கொண்டிருந்தார். வினோத்தும், இளந்தமிழனும் மது குடித்து கொண்டிருந்த போது அவர்களை பார்த்து சண்முகம் முறைத்து பார்த்து திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் பிரச்சினை ஏற்படும் என கருதி வினோத் தனது நண்பருடன் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் வினோத்தும் இளந்தமிழனும் மடுகரை ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அங்குள்ள மதுக்கடை அருகே வந்த போது அவர்களை சண்முகம் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் வழி மறித்தனர்.

    பின்னர் சண்முகமும், அவரது நண்பர்களும் தகாத வார்த்தைகளால் திட்டி வினோத்தையும், இளந்தமிழனையும் தடியாலும், கல்லாலும் தாக்கினர். மேலும் பீர் பாட்டிலாலும் குத்தினர். அதோடு 2 பேரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

    மேலும் வினோத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். அப்போது அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு வரவே சண்முகம் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த வினோத் மற்றும் அவரது நண்பர் இளந்தமிழன் ஆகிய இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் இதுகுறித்து வினோத் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோதலை தடுக்க முயன்ற வக்கீலை பீர்பாட்டிலால் சரமாரியாக தாக்கிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அங்கு மணிகண்டனின் கட்சிக்காரரான சசியுடன் மேலும் 3 நபர்கள் இருந்தனர்.

    புதுச்சேரி:

    மோதலை தடுக்க முயன்ற வக்கீலை பீர்பாட்டிலால் சரமாரியாக தாக்கிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாகூர் அருகே ஆதிங்கப்பட்டு சத்யா நகரை சேர்ந்தவர் கவியரசன் (வயது33). இவர் புதுவை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கவியரசன் கோர்ட்டில் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட தயாரான போது அவரது நண்பரும், வக்கீலுமான மணிகண்டன் என்பவர் கோர்ட்டு எதிரே ரோடியர் மில் திடலில் தனது கட்சிக்காரரை சந்தித்து பேசிவிட்டு செல்லலாம் என்று அழைத்ததின் பேரில் மணிகண்டனுடன் கவியரசன் ரோடியர் மில் திடலுக்கு சென்றார்.

    அங்கு மணிகண்டனின் கட்சிக்காரரான சசியுடன் மேலும் 3 நபர்கள் இருந்தனர். அவர்களிடம் மணிகண்டன் வழக்கு சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது மணிகண்ட னுக்கும் அவரது கட்சிக்காரர் சசிக்கும் பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பு நடக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.

    மேலும் மணிகண்டனை சசி தாக்க முயன்றார். இதையடுத்து கவியரசன் அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்ய முயற்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த சசி மற்றும் அவரது கூட்டாளிகள் வக்கீலுக்கு வக்கீல் ஆதரவாக பேசுகிறாயா? என கூறி கவியரசனை கையால் தாக்கினர்.

    மேலும் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து கவியரசனை தலையில் சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சசி மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த கவியரசனை அவரது நண்பர் மணிகண்டன் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்.

    பின்னர் இதுகுறித்து கவியரசன் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பணத்தை திருப்பி கேட்ட வாலிபருக்கு பீர் பாட்டிலால் அடித்தனர்.
    • ராம்குமாரை தாக்கியதாக, பிரபு செந்தில் உள்பட 5 பேர் கும்பலை தல்லாகுளம் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நாராயணபுரம், குறிஞ்சி நகர், கபிலர் தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 48). இவர் தனது நண்பர் நீதிமோகன் என்பவருடன், நாராயணபுரம் பேங்க் காலனியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த பிரபு, செந்தில் உள்பட 5 பேர் கும்பல் ராம்குமாரிடம் தகராறு செய்து அவரை பிளாஸ்டிக் சேர் மற்றும் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றது.

    இதில் படுகாயமடைந்த ராம்குமாரை அங்கு இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது ராம்குமாருக்கு கடந்த 2019-ம் ஆண்டு வேலை வாங்கி தருவதாக, பிரபு என்பவர் ரூ.20 லட்சம் வாங்கி உள்ளார். அதன் பிறகு அவர் ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி வேலை வாங்கித் தரவில்லை.

    எனவே ராம்குமார் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் ராம்குமாரை தாக்கியது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து ராம்குமாரை தாக்கியதாக, பிரபு செந்தில் உள்பட 5 பேர் கும்பலை தல்லாகுளம் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×